Friday, April 29, 2011

செல்வக்கவி

   என் தாயின் பாதை எதுவோ




















அம்மா உனைப் போலொரு அம்மா எனக்கில்லை
அமுதே உனைப் போலொரு அமுதில்லை
நான் நடந்தேன் நீ புரண்டாய்
நான் சிரித்தேன் நீ சிரித்தாய்
நான் அழுதேதன் நீ துவண்டாய்
இந்த ஜென்மஜனனம் எதற்காக
எனக்காகவென்று நீ சொல்லு

Wednesday, April 13, 2011

செல்வ ஆக்கங்கள்

அங்காடித்தெரு படம் என் கண்ணோட்டத்தில்...
இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் நிறையப் படங்கள் வருகிறது. ஆனால் மக்கள் நெஞசில் ஒரு சிலதே நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. அப்படி ஒரு படம் அங்காடித்தெரு. எப்போதோ வெளிவந்து விட்டாலும் சமீபத்தில் தான் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. தமிழ் சினிமா எப்போதும் எடுக்கும் கதைச் சக்கரத்தில் சுழலாமல் வித்தியாசமாக எடுத்திருக்கிறார்கள்.

Tuesday, April 12, 2011

செல்வ ஆக்கங்கள்

Nanook of the north என் பார்வையில்...

இத்திரைப்படம் இக்ளு என்கிற பனிக்கட்டி வீடுகளில் வாழும் எக்ஸிமோவர் இன மக்களுடைய் வாழ்க்கை முறையினை சித்தரித்து காட்டுகிறது. அவர்களினுடைய நாளாந் வாழ்க்கை முறை உணவுப் பழக்கவழங்கள் வாழ்வியல் அமைப்பு முறை என்பன இப்படத்தின் ஊடாக வெளிப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
படத்தில் பேச்சுக்கள் இன்றி வெறும் சைகைகளே மடடுமே காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு கட்டமும் ஸ்கிரீனில் எழுத்துக்களாக போடப்படுவது விளங்கிக் கொள்ள முடிகிறது.

Monday, March 28, 2011

செல்வ ஆக்கங்கள்

The children of heaven
சொர்க்கத்தின் குழந்தைகள். ஈரானிய மொழியில் குறுந்திரைப்படமொன்றை அண்மையில் பார்த்து பாதித்த படம். அலி, சிவோத் எனும் அண்ணன், தங்கை. ஏழைக்குடும்பம்! தங்கையின் சப்பாத்தை அலி தைக்கக் கொடுத்து விட்டு வரும் போது அதனை தொலைத்து விடுகிறான்.

Wednesday, March 23, 2011

ஊடகப் பயிற்சி மாணவர்களின் உள்ளகப் பயிற்சிப் பயணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் முழுநேர கற்கைநெறி மாணவர்கள் உதயனைப் பார்வையிடுவதற்கு 23.03.2011 அன்று சென்றிருந்தனர். 

Wednesday, March 16, 2011

செல்வ ஆக்கங்கள்

Please vote for me திரைப்படம் என் கண்ணோட்டத்தில்
தயவுசெய்து எனக்காக வாக்களியுங்கள் திரைப்படத்தை சமீபத்தில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் mandarin மொழியில்...! 2007ஆம் ஆண்டில் Weijun chen என்பவரால் சாதாரண வீடியோவில் 58 நிமிடங்கள் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
Evergreen primary schoolஇல் 3ஆம் வகுப்பு மாணவ தலைவரை தீர்மானிப்பதற்கான தேர்தல் நடக்கிறது.அதில் Luo Lei, Xu Xaiofei, Cheng Cheng இம்மூன்று பேரும் நிற்கிறார்கள்.

Monday, March 14, 2011

செல்வ ஆக்கங்கள்

The bicycle thief

பைசிக்கிள் தீஃவ்ஸ் திரைப்படம் இத்தாலி மொழியில் வெளிவந்த கலைப்படமாகும்.பிரபல கலைப்பட இயக்குனரான வித்தோரியொடி சில்காவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படமே இந்தியக் கலைப்பட இயக்குனரான சத்யஜித்ராயைத் திரைப்பட இயக்குனராக மாற்றியது.  
,j;jpiug;glj;jpd; jahhpg;ghsh; fpAnrg;ng mnkNjh. fij Yhfp gh;j;Njhypdp rPrh; rthh;j;jpdp. 1948 etk;gh; 24,y; ,g;glk; ntspte;jJ. 93 epkplq;fNs ,g;glk; fhl;rpgLj;jg;gl;L ,j;jhypad; nkhopapy; ntspte;jJ.

இரண்டாம் உலக யுத்தத்தின் காலப்பகுதியில் இத்தாலி ரோம் நகரம். வேலை கிடைக்காத நாட்கள். குழுமியிருக்கும் 30 பேர்களில் 2 பேருக்கு வேலை என்று அறிவிக்கும் முதல் காட்சியே வேலை இல்லா திண்டாட்டத்தை சொல்லிவிடுகிறது அந்தோனியோ வேலை செய்யும் நிறுவனத்தின் சட்டப்படி ஒரு மிதிவண்டியை வைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமானதாகக் கருதப்பட்டது. சுவரொட்டிக்களை ஒட்டும் வேலை. மாதம் 6000+ லிரா சம்பளம்.