ஜரோப்பிய ஒன்றியம்
ஜரோப்பிய கட்டமைப்பு, ஜரோப்பிய யூனியன் என அழைக்கப்படும் ஜரோப்பிய ஒன்றியமானது தற்போது 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும்.
1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஜரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம் 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஜரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. 1952ஆம் ஆண்டில் பிரசல்ஸினை தலைமையகமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 15 நாடுகளை அங்கமாகக் கொண்ட இவ்வொன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்து வருகிறது.
ஜரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கங்களாக இவற்றைக் கூறலாம்.
1.அங்கத்துவ நாடுகளிடையே ஒற்றைச்சந்தை நிலைமை தோற்றுவித்தல்.
2.அதனூடாக உலக சந்தையுடன் போட்டியிடல்.
3.நாடுகளின் உற்பத்தி பொருட்களை வரிகள் எதுவுமின்றி அங்கத்துவ நாடுகளிடையில் பரிமாற்றம் செய்தல்.
4.கடவுச்சீட்டு எதுவுமின்றி மக்கள் அங்கத்துவ நாடுகளிடையில் சுதந்திரமாக நடமாடல்.
இவ்நோக்கம் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான அடிப்படைத்தளமாக யூரோ எனும் புதிய பொது நாணயமொன்றை இவ்வொன்றியம் தோற்றுவித்துள்ளது.ஜரோப்பிய நாணய ஒன்றியத்தில் 12 நாடுகள் மாத்திரமே அங்கம் வகிக்கின்றன. (ஜேர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ், பின்லாந்து, இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின், அயர்லாந்து, நெதர்லாந்து, லக்ஸம்பேர்க், பெல்ஜியம், பிரிட்டன், சுவீடன், கிரேக்கம், டென்மார்க்) எனினும் பிரிட்டன், சுவீடன், டென்மார்க் ஆகிய 03 நாடுகள் அரசியல் காரணத்திற்காக யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுகின்றன.
ஜரோப்பிய ஒன்றியம் ஜரோப்பிய ஆணையம் ஜரோப்பிய நாடாளுமன்றம் ஜரோப்பிய ஒன்றிய அவை ஜரோப்பிய அவை ஜரோப்பிய நீதிமன்றம் ஜரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது.
ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகள்
ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்பிரஸ், செக்குடியரசு, டென்மார்க், எஸ்தேனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம;ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பர், மால்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல, ருமேனியா, சிலோவாக்கியா, சிலோவோனியா, எசுப்பானியா, சுவீடன், ஜக்கிய இராச்சியம்
தற்போது குரோசியா, மசிடோனியக் குடியரசு, துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்வதற்கான நியமனம் பெற்றுள்ளன. மேற்கு பால்க்கன் பகுதி நாடுகளான அல்பேனியா, பொஸ்னியாவும் ஹெர்சகொவினாவும், மான்டனீக்ரோ செர்பியா ஆகிய நாடுகளும் இவ்வமைப்பில் சேரும் தகுதியுள்ளவையாக ஏற்கப்பட்டுள்ளன.
ஜரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகள்
யூரோ நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக பதினைந்து உறுப்பு நாடுகள் பொருளியல் மற்றும் நாணயவியல் ஒன்றியமாக ஏற்றுக் கொண்டுள்ளன. இது வெளிநாட்டலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியதுடன் உலக வணிக அமைப்பு, ஜி8 உச்சி மாநாடு, ஜக்கிய நாடுகள் சபை என்பவற்றிலும் சார்பாண்மை கொண்டுள்ளது.
21 ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் ‘‘நாட்டோ’’ அமைப்பிலும் உறுப்புநாடுகளாக உள்ளன. ஜரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்புநாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புச் செய்துள்ளன. செஞ்சென் ஒப்பந்தத்தின் கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டு கட்டுப்பாட்டுமுறையும் ஒழிக்கப்பட்டுள்ளது. ஜரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள் பொருட்கள் சேவைகள் முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நகர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக் கொள்கை, வேளாண்மை, மீன்பிடிக் கொள்கைகள் என்பவற்றுடன் பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. மொத்த தேசிய உற்பத்தியில் ஜேர்மனி பிரான்ஸ் இத்தாலி முதலிய நாடுகள் யூரோ வலயத்தின் மிகப் பெரிய பொருளாதார வளங்களுக்குள் அடங்கி நிற்கின்றன.
ஜரோப்பிய ஒன்றியம் முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையேயான இணக்கப்பாடு, அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்பக்கள் ஆகியவற்றை கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஜரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஜந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜரோப்பிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்கின்றனர்.
ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்ட ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30வீதத்தை உருவாக்குகின்றன.