Thursday, November 1, 2012

எம் நண்பன் இவன் தான் யாழ்.வாழ்வியலுடன் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள்



எம் எல்லோருடைய நண்பனும் பெரும்பாலும் எம்மைப் போன்று மனிதனாகத் தான் இருப்பான். வாயால் பேச முடியாவிட்டாலும் விலங்குகள் சிறந்த நட்பாக விளங்கியிருக்கின்றன. அதைப்போன்று நம் யாழ்ப்பாணத்தவருக்கு தோள்கொடுக்கும் நண்பனாக மோட்டார் சைக்கிள்கள் மாறிவருகின்றன.


கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாண வீதிகள் பெரும்பாலும் சைக்கிள்களையே கண்டுபழக்கப்பட்டவை. எல்லா வீடுகளிலும் எப்படியும் ஆளுக்கொரு சைக்கிள் நிற்கும்.

முன்பு யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை வரைக்கும் சைக்கிள்களில் போவார்களாம். ஆனால் இப்போது பக்கத்து வீதியிலுள்ள கடைக்குப் போவதற்கே மோட்டார் சைக்கிள் தேவைப்படுகின்றது.

இன்று மாறிவரும் மாற்றங்களுக்கேற்ப வீட்டுக்கொரு மோட்டார் சைக்கிள் எனும் நிலை உருவெடுத்தது. அதன்பின் அந்நிலை கடந்த மூன்று ஆண்டுகளில் ஆளுக்கொரு மோட்டார்சைக்கிள்களாக வளர்ச்சி பெற்றது.
இன்று ஆளுக்கொரு மோட்டார் சைக்கிள்களில் திரிகிறார்கள். மக்களது சகல தேவைக்கும் உரிய நிவாரணி நண்பனாக மோட்டார்சைக்கிள்கள் தோள் கொடுக்கின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள்களுக்கான பெறுமதி 20மூ வீதத்தினால் அதிகரித்தது. அதன்பின் மோட்டார் சைக்கிளை வாங்குவதில் மக்கள் நாட்டத்தினைச் செலுத்தினார்களா என்பதற்கு மோட்டார் சைக்கிள் விற்பனையாளர் ஒருவர் இவ்வாறு கூறுகின்றார். ‘‘எங்களது கடையில் அதிகளவில் ஸ்கூட்டி(ளுஉழழவல) வகை மோட்டார் சைக்கிளைத்தான் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் வாங்குவார்கள். முந்தி மாதத்திற்கு 400-500 வரை ளுஉழழவல விற்பனையாகிட்டு இருந்திச்சு. இப்ப 200-250 மட்டில்தான் போகுது. விலை அதிகரிச்சாப்பிறகும் விற்பனையாகுது தான். ஆனா முந்தின பிஸ்னஸ் இப்ப இல்ல’’ என்கிறார்.

‘‘எனக்கு வாங்கணும் என்டு நிறைய நாளாக ஆசை. காசு கிடைச்சு வாங்கிற நேரத்தில போய் விலை ஏறிட்டுது. இன்னும் கொஞ்சம் காசு சேர்த்து வாங்கணும் ’’ என்று ஆதங்கப்படுகின்றார் வயறிங் வேலை பார்க்கும் றெக்ஸ்.

வடமராட்சியில் துன்னாலை வடக்கு கலிகைக்கந்தன் ஆலய உற்சவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அவ்வூரில் உள்ள இளைஞர்கள் 69 மோட்டார் சைக்கிள்களை ஒருங்கே வாங்கியிருக்கின்றார்கள். திருவிழா நடக்கும் காலத்தில் முண்டியடித்துக் கொண்டு மோட்டார்சைக்கிள்களை வாங்குவது அவர்களுக்கிடையே ஒரு போட்டியாகும். இவ்வாறு விலை அதிகரிப்பின் பின்னரும் போட்டிக்காகவும் அவர்கள் வாங்குகிறார்கள்.

யாழ்.மாவட்டத்தில் இதுவரையிலும்(2011ஆம் ஆண்டு டிசெம்பர் தரவின்படி) 58ஆயிரத்து 17லட்சம் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பாவனையில் உள்ளன.
கடந்த இரு ஆண்டுகளில் பதிவிற்காகவும் சாரதி அனுமதிப் பத்திரத்திற்குமான பதிவுகள்.
விபரம்                                                                                 2010 2011 வித்தியாசம்
மோட்டார் பதிவு செய்தோர்                                1515         2851 1336
அனுமதிப்பத்திர விண்ணப்பித்தோர்               14440 19575 5135
வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள்      5646        11931 6285

2010ஆம் ஆண்டில் பதிவு  செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சாரதி அனுமதிக்காக பதிவானவை 2011ஆம் ஆண்டில் சரிக்கு சமவிகிதத்தில் அதிகமாகி இருக்கின்றது.

இ.செல்வரத்தினம் என்பவர் சைக்கிளையே பயன்படுத்துகின்றார். ‘‘நான் சிறுவயது முதலே சைக்கிளில தான் ஓடித் திரியுறன். அதுதான் எங்கட ஆரோக்கியத்துக்கு நல்லது. இப்பத்த இளசுகள் உந்த மோட்டார்சைக்கிளில ஓடி வீணாய் காசுகளை செலவழிக்குதுகள். படம் காட்டி தேவையில்லாம தங்கட உசிருகளையும் இழக்குதுகள் ’’ என்கின்றார்.

யார் என்ன சொன்னாலும் மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாணத்தவர் வாழ்வோடு ஒன்றிப் போய் இருக்கின்றது.
யாரும் உதவி செய்யக் கூட முன்வராத இந்தக் காலத்தில் மோட்டார் சைக்கிள் சிறந்த நண்பனாகத் தான் வழிகாட்டுகின்றது.


மு.கௌசிகா
ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம்



No comments:

Post a Comment