Wednesday, April 13, 2011

செல்வ ஆக்கங்கள்

அங்காடித்தெரு படம் என் கண்ணோட்டத்தில்...
இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் நிறையப் படங்கள் வருகிறது. ஆனால் மக்கள் நெஞசில் ஒரு சிலதே நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. அப்படி ஒரு படம் அங்காடித்தெரு. எப்போதோ வெளிவந்து விட்டாலும் சமீபத்தில் தான் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. தமிழ் சினிமா எப்போதும் எடுக்கும் கதைச் சக்கரத்தில் சுழலாமல் வித்தியாசமாக எடுத்திருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தின் இட்டமொழிக் கிராமத்தில் பிளஸ்டுவில் பாடசாலையிலேயே முதலாவதாக வரும் லிங்கு தந்தை இறந்து விட அங்காடித்தெரு வருகிறான் வேலை தேடி. தன் நண்பனுடன் அங்கே செந்தில் முருகன் ஸ்டோர்ல வேலை கிடைக்கிறது.
சாப்பாடு தங்குமிடம் அங்கேயே ஏற்பாடு செய்து தரப்படுகிறது. சாப்பிடுமிடமோ வாந்தி எடுக்க வைக்கிறது. 12 மணி நேரத்துக்கு மேல் வேலை அடித்துப் பிடித்து சாப்பிட்டு வந்தால் தாமதமாகும் ஒவ்வொருநிமிடத்துக்கும் சம்பளத்தில் பிடித்தம் ஆண் என்றால் மிருகத்தனமான அடி பெண் என்றால் கூடுதலாக பாலியல் பலாத்கார சூழ்நிலை அங்கு தானே இருக்க வேண்டும்? அக்கடையில் வேலை பார்க்கும் கனிக்கு இவர்களோடு எப்போதுமே மோதல் தான் மோதல் தணிந்து இருவரும் பரஸ்பரம் புரிந்து கொள்கின்றனர்.
கடைக்கார அண்ணாச்சிக்கு இந்த காதல் தெரிந்து விட சித்திரவதையின் உச்சத்தை அனுபவிக்கிறார்கள். போராடிவெளியேறுகிறார்கள். முதல் நாளிரவை சென்னையின் நடைபாதையில் கழிக்க முயல அந்த இரவே விபத்து கனியின் கால்களை பதம் பார்த்து விடுகிறது. ஆனாலும் அவர்கள் நேசம் அனலில் வீசும் தென்றலாய் குளிரத் தான் செய்கிறது. சோகத்திலும் ஒரு தித்திப்பாய் படம் முடிவடைகிறது.

இதில் குறிப்பிட வேண்டிய நிறைய அம்சங்கள் இருந்தாலும் படத்தை இயல்பாக நகர்த்தியிருக்கும் விதம் அருமை அதிலும் காட்சிகளை யதார்த்தமாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
அன்றாடம் நம் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் கண்முன்னே காட்டியிருக்கிறார்கள். ஹீரோயிசத்தை தாண்டி இயல்பாக நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.இயக்குநர் வசந்தபாலன் இப்படத்தின் கதைக்காகவே 300 மணித்தியாலங்கள் தனது செல்போனில் அங்காடித்தெருவில் படம் பிடித்திருக்கிறார். அந்த உழைப்பு வீண்போகவில்லை என்றே சொல்லணும். ஆனால் வழமையான சினிமாத்தனம் சில சில காட்சிகளில் உள்ளே நுழையத் தான் எத்தனிக்கிறது.

1 comment:

  1. 12 மணி நேரத்துக்கு மேல் வேலை ....
    "இந்த கதை தமிழ் நாட்டின் பிரபல புடவை கடையை மையமாகவே எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறந்த வெற்றித் திரைப்படம்..."

    ReplyDelete