அம்மா உனைப் போலொரு அம்மா எனக்கில்லை
அமுதே உனைப் போலொரு அமுதில்லை
நான் நடந்தேன் நீ புரண்டாய்
நான் சிரித்தேன் நீ சிரித்தாய்
நான் அழுதேதன் நீ துவண்டாய்
இந்த ஜென்மஜனனம் எதற்காக
எனக்காகவென்று நீ சொல்லு
தாய்வேசம் என்றும் போடாது
தாய்பாசம் தான் என்றும் போடும்
பாசம் ஒரு வேலி
அதைக் கடந்து விட்டால் அது தூசி...
நீராடினால் தூய்மை
நீராட்டினால் அழுக்கு
இந்த வாதம் எனக்கும் உனக்கும் கிடையாதே
காலம் போட்ட முடிச்சு அது தானோ?
மௌனபாசை பேசாதே எனக்குப் பிடிக்கவில்லை
தாய்மைப்பாசை பேசுதே எனக்காக
விதி சொன்ன வீட்டில் வாழ்ந்திருந்தோம்
விதி காட்டிய வழியில் நீ நடந்தாய்
விதியோடு போராடினோம் தள்ளாடினோம்
அது சிரிக்க நாம் அழுதோம்
எம்மை அழவைத்த காலனுடன் சென்றது முறை தானோ
விதி சொன்ன பாதை எது தானோ?
No comments:
Post a Comment