Wednesday, March 16, 2011

செல்வ ஆக்கங்கள்

Please vote for me திரைப்படம் என் கண்ணோட்டத்தில்
தயவுசெய்து எனக்காக வாக்களியுங்கள் திரைப்படத்தை சமீபத்தில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் mandarin மொழியில்...! 2007ஆம் ஆண்டில் Weijun chen என்பவரால் சாதாரண வீடியோவில் 58 நிமிடங்கள் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
Evergreen primary schoolஇல் 3ஆம் வகுப்பு மாணவ தலைவரை தீர்மானிப்பதற்கான தேர்தல் நடக்கிறது.அதில் Luo Lei, Xu Xaiofei, Cheng Cheng இம்மூன்று பேரும் நிற்கிறார்கள்.


வேட்பாளர்களில்  ஒருவரான Xu Xaiofei, பேசத் தொடங்கும் போது வகுப்பிலுள்ள மாணவர்கள் அவளை கேலி பேச அவள் அழுகிறாள். அவளுடைய தாயாரும் ஆசிரியரும் தேற்றுகின்றனர். அதன் பின்னர் கதைக்கிறாள் அழுகையினூடே… அந்த வகுப்பிலுள்ள மாணவர்களுக்கு 8 வயது தான். அவர்களுடைய மனப்போக்கு எதையும் தாங்கிக் கொள்ளாத மனம்!
இவ் வேட்பாளர்களின் பெற்றோரும் தமது பிள்ளைகளுக்காக அவர்கள் ஜெயிப்பதற்காக அறிவுரைகளை வழங்குகின்றனர். Cheng Cheng தனது மிரட்டலாலேயே மாணவர்களை தன் கட்சிக்கு கொண்டு வரலாம் என்று நினைக்கிறான்.ஆனால் சிறு பிள்ளைகளில் எந்தப் பிள்ளைக்கு மிரட்டுபவரை பிடிக்கும்!
வேட்பாளர்கள் தம் திறமைகளை வெளிக்கொணர பேச்சுககளை பேசுகின்றனர். தமக்குள்ளேயே கேள்விகளையும் கேட்டுக் கொள்கின்றனர்.

முதலில் அரைவாசிக்கட்ட படத்தில் நினைத்தேன்…Xu Xaiofeiஅல்லது Cheng Cheng  தான் ஜெயிப்பார்கள் என்று! ஆனால் பரிசுப் பொருட்களை வழங்கி 25% மதிப்பென்களைப் பெற்று வென்று விட்டான் Luo Lei.
Xu Xaiofei உம் Cheng Cheng உம் தோல்விகளை தாங்க முடியாது அழுகின்றனர். அதிலும் Cheng Cheng  தான் வெல்வேன் என்ற திடத்துடன் இருந்தவன்…. விக்கி விக்கி அழுகின்றான். ஆசியர் தேற்றுவதுடன் இப்படம் முடிவடைகிறது.
இப்படம் 58 நிமிடங்களே ஒளிபரப்பானபோதும் ஜனநாயகத் தேர்தலை கண்ணுக்கு முன் வைக்கிறது.

No comments:

Post a Comment