Saturday, March 12, 2011

ஜக்கிய நாடுகள் சபை

ஜக்கிய நாடுகள் என்பது நாடுகளைக் கொண்ட பன்னாட்டு அமைப்பாகும். கிட்டத்தட்ட உலகின் எல்லா அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. ஜக்கிய நாடுகளின் கொடியில் காணப்படும் ஒலிவ் இலைகள் சமாதானத்தைக் குறிக்கும். ஜக்கிய நாடுகள் சபையில் ஆங்கிலம், பிரெஞ்ச், சீனம், அராபிக், ரஷ்யன் போன்ற 5 மொழிகள் பயன்படுத்தப்படுகின்றது.

1945 யூலை கல்போனியாவிலுள்ள சான்பிரான்சிஸ்கோவில் 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய ஒரு மாநாட்டில் ஜக்கிய நாடுகள் சாசனம் உருவாக்கப்பட்டது. உள்நாட்டு அரசியல் நிலைமை காரணமாக போலந்து இம்மாநாட்டில் கலந்து கொள்ளாவிடினும் பின்பு கைச்சாத்திடப்பட்டு 51வது நாடாக இச்சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டது. அக்டோபர் 24 1945இல் சீனா, பிரான்ஸ், சோவியத் ரஸ்யா, அமெரிக்கா போன்ற பல நாடுகளால் இச்சாசனம் அங்கீகரிக்கப்பட்டதன் பின் உத்தியோகபூர்வமாக ஜக்கிய நாடுகள் சபை ஆரம்பித்து வைக்கப்பட்டது. உலகெங்கும் அக்டோபர் 24 ஜக்கிய நாடுகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜக்கியநாடு சாசனம் வோஷிங்டன் நகரிலுள்ள தேசிய சுவடிகள் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஜக்கியநாடு சாசனம் 111விதிகளை கொண்டது.

ஜக்கியநாடு சபையின் கொள்கைகளாக இவற்றைக் கூறலாம்.
.சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணல்.
.நாடுகளிடையே நட்புறவை வளர்த்தல்.
.சர்வதேசப் பொருளாதார சமூக கலாசார மனிதாபிமான பிணக்குகளை தீர்த்தல்.
.மனித அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாத்தல்.

ஜக்கிய நாடுகள் முறைமை பிரதான அமைப்புக்களை கொண்டது.
.ஜக்கிய நாடுகள் பொதுச் சபை
.ஜக்கிய நாடுகள்
.ஜக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
.ஜக்கிய நாடுகள் நம்பிக்கைப் பொறுப்புச் சபை
.ஜக்கிய நாடுகள் செயலகம்
.ஜக்கிய நாடுகள் சர்வதேச நீதிமன்றம்
ஜக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஜக்கிய அமெரிக்காஇ சீனா பிரான்ஸ் பிரித்தானியா ரஸ்யா ஆகிய 5 நாடுகள் நிரந்தர அங்கத்துவம் கொண்ட நாடுகளாகும். இந்த நாடுகளுக்குப் பாதுகாப்புச் சபையில் எடுக்கப்படும் தீர்மானத்தினை மறுத்து வீட்டோ அதிகாரத்தினை எடுப்பர். ஜக்கிய நாடுகள் சபையில் வாடிகான் எனும் ஜரோப்பிய நாடு அங்கத்துவம் பெறவில்லை. இச்சபையிலிருந்து தைவான் வெளியேற்றப்பட்டுவிட்டது.

ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பதவிக்காலம் 5 வருடங்களாகும். 1946-1953 முதலாவது செயலாளராக நோர்வேயின் டிரைவ்லை இருந்தார். தற்பொழுது தென்கொரியாவின் பான்கிமூன் உள்ளார். 1997-2006 வரை கானா நாட்டின் கொபி அனான் இரு தடவைகள் இருந்துள்ளார்.

ஜக்கிய நாடுகள் பொதுச்சபை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஐக்கிய நாடுகளின் ஐந்து முக்கிய அங்கங்களுள் ஒன்றாகும். இதில் எல்லாநாடுகளிற்குமே சம உரிமையளிக்கப்படும். இதுவே ஜக்கிய நாடுகளின் பிரதான கருத்துப் பரிமாற்ற அமைப்பாகும். ஒவ்வொரு உறுப்பு நாடுகளுக்கும் ஒவ்வொரு வாக்குரிமையுண்டு. புதிய நாடுகரள அனுமதித்தல், அமைதியும் பாதுகாப்பும், வரவு செலவுத் திட்ட விடயங்கள் போன்ற முக்கிய விடயங்களுக்கு மூன்றில் 2 பெரும்பான்மை வாக்குகள் அவசியம். அது பொதுவாக 7 பிரதான நிர்வாகக் குழுக்கள் மூலம் நிறைவேற்றப்படும். பொதுச்சபை மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கமையவே ஆண்டு முழுதும் அரமயத்தின் நடவடிக்கை அமையும்.

இதன் முதலாவது கூட்டமானது 10 ஜனவரி 1946 இல் வெஸ்மினிஸ்டர் மத்திய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அனைத்துலக நீதிமன்றம்

அனைத்துலக நீதிமன்றம் என்பது, ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. அனைத்துலகச் சட்டங்கள் தொடர்பான தனியார் ஆய்வு மையமான, ஹேக் அனைத்துலகச் சட்ட அக்கடமி என்னும் நிறுவனத்துடன் அமைதி மாளிகை என அழைக்கப்படும் கட்டிடத்தை அனைத்துலக நீதிமன்றம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் பல நீதிபதிகள் மேற்படி அக்கடமியுடன் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தின்படி 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந் நீதிமன்றம் 1946 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கியது. இது முன்னர் இயங்கிவந்த நிரந்தர அனைத்துலக நீதிமன்றம் என்பதற்கான பதிலீடாகச் செயல்பட்டது. இதன் சட்டங்களும் இதன் முன்னோடியின் சட்டங்களை ஒத்ததே. அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் என்பதும் அனைத்துலக அளவிலான நீதி வழங்குதலுடன் தொடர்புடையதாக இருப்பினும் அதுவும், அனைத்துலக நீதிமன்றமும் ஒன்றல்ல.

இதன் உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், முறையான அதிகாரம் பெற்ற அனைத்துலக அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆகியவை முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய பணிகளாகும். இதன் வரலாற்றில் மிகக் குறைந்த வழக்குகளையே இது கையாண்டுள்ளது எனினும், 1980 களுக்குப் பின்னர் இந் நீதிமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதில், சிறப்பாக வளர்ந்துவரும் நாடுகள் மத்தியில், ஆர்வம் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபைப் பட்டயத்தின் 14 ஆம் பிரிவு, உலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதற்குப் பொதுச்சபைக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனினும் இது சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தடுப்பு வாக்குரிமைக்கு உட்பட்டது ஆகும்.


மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பாகும். இது மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையானது 15 மார்ச் 2006இல் தீர்மானிக்கப்பட்டதன்படி புதியதாக உருவாக்கப்பட்டது. இதில் 191 பேர் கொண்ட பொதுச்சபையில் 170 பேரின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்கா, மார்ஷல் தீவுகள், பலவு மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இவ்வமைப்பானது மனித உரிமைமீறல்களைகளில் இருந்து பாதுகாப்பை வழங்குவதற்கு அதிகாரங்கள் போதாதிருப்பதாக் கூறி எதிர்த்து வாக்களித்தன.



ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் என்பது பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய 1948ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும்.
ஜூன் 25 1993ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் (48ஃ141 விதிமுறைகளுக்கமைய) இவ்வாணையம் அமைக்கப்பட்டது. இவ்வாணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை ஜூலை 28, 2008ம் ஆண்டில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


உலக மனித உரிமைகள் சாற்றுரை
உலக மனித உரிமைகள் சாற்றுரை என்பது 1948ஆம் ஆண்டில் பாரிசில் உள்ள சைலட் மாளிகையில் வைத்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாற்றுரை ஆகும்.




ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு

ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்றாகும்.

1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந் நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள் மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந் நிறுவனம் இயங்கி வருகின்றது.
இவ்வகையான ஒத்துழைப்பினால் உலகில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தி அதன் மூலம் இன மொழி மத பால் வேறுபாடின்றி உலக மக்கள் அனைவருக்குமான நீதி சட்ட விதிமுறைகள் மனித உரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் உரிமை ஆவணத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிற்கு உலகளாவிய ரீதியில் கிடைக்கும் மதிப்பை உறுதி செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.
இவ்வமைப்பானது யுனேஸ்கோ கூரியர் எனும் இதழை வெளியிடுகின்றது

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்


ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டாம் உலகயுத்ததில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களிற்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. 1953இல் ஐக்கியநாடுகளின் நிதந்தர அமைப்பாகி இதன் முன்னைய பெயரான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுச் சிறுவர்களிற்கான அவசரகால உதவி எனும் பெயரானது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என மாற்றப் பட்டது. இதன் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் தாய் சேய் தொடர்பான வசதிவாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 1965ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது. இது தனது திட்டங்களிற்கான நிதி வசதிக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களையே சார்ந்துள்ளது.
யுனிசெவ் அமைப்பானது 155 நாடுகளில் பணியாற்றி வருகின்றது. கீழ் வரும் ஐந்து முக்கிய இலக்குகளில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஈடுபட்டு வருகின்றது.
1.பெண் பிள்ளைகளின் கல்வி
2.எச்.ஐ.விஃஎய்ட்ஸ்
3.சிறுவரின் பாதுகாப்பு
4.ஏற்பூசி ஏற்றல்
5.சிறார் பருவம்


உலக வங்கி
உலக வங்கி குழுமம், ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய நிறுவனமாகும்.1945இல் டிசம்பரில் நிறுவப்பட்டு 1946இல் ஆரம்பிக்கப்பட்டது.
உலக வங்கியும் அதன் அங்க நிறுவனங்களும் அமெரிக்கத் தலை நகரான வாஷிங்டன் டி.சி. யில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன.
வறுமை குறைப்பு, நாடுகளின் முன்னேற்றம், உறுப்பு நாடுகளில் பன்னாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பது, முதலீடுகளை அதிகரிப்பது ஆகியன உலக வங்கியின் குறிக்கோள்களாகும். சர்வதேச ரீதியாக நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குகிறது.

சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியம் 1947இல் அமெரிக்காவின் வாஷிங்டனில் தோற்றம் பெற்றது. உலகளதவிய ரீதியில் நிதி தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்தலும் வழங்கலும் இதன் செயற்பாடுகளாகும்.


உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகளின் விசேடத்துவ அமைப்பாகும்.ஏப்ரல் 07 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஒப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும்.
இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது.உலகளாவிய ரீதியில் சுகாதார நல மேம்பாட்டு நடவடிக்கைக்கு பொறுப்பாக உள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு
இத்தாலி ரோமைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் பொதுவாக உணவு மற்றும் விசாய அமைப்பென அறியப்படும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது மக்களின் ஊட்ட நலனை அதிகரிப்பதற்கும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும் வேளாண்மை மற்றும் உணவுப் பொருட்தயாரிப்பு சந்தைப்படுத்தல் விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை விருத்தி செய்து பசி பட்டினியை நீக்கப்பாடுபடுகின்றது.

ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியன கம்பளிகள், உணவு, வீடுகள், சிறகவரை போன்றவற்றை தேவையானவர்களுக்கு இவ்வமைப்பினூடாக வழங்கியுள்ளன. இதன் இலச்சினையிலுள்ள fiaf panisஇன் பொருளானது "ரொட்டி (இலங்கைத் தமிழ்: பாண்) ஆவது இருக்கவேண்டும்" என்பதாகும்.
1945 இல் இவ்வமைப்பானது கனடாவில் கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டு தலைமை அலுவலகமானது வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து ரோமுக்கு மாற்றப்பட்டது. 11 ஏப்ரல் 2006 இல் 190 அங்கத்துவர்களைக் கொண்டுள்ளது (189 அங்கத்துவ நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும்).

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம்
1962இல் ஈரான் நாட்டில் ஏற்பட்ட பூமிஅதிர்ச்சி, அதைத் தொடர்ந்து அக்டோபரில் தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட புயல், புதிய சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவில் 5 மில்லியனிற்கும் மேற்பட்ட அகதிகள் போன்ற பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு 1963ஆம் ஆண்டு பரீட்சார்த்தகரமாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டமானது 3 ஆண்டுகளிற்கு ஆரம்பிக்கப்பட்டது.

இதன் வெற்றிகரமான திட்டங்களைத் தொடர்ந்து சுனாமி பேரழிவு வரை அதன் பணிகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வருடமும் 90 மில்லியன் வறுமைக்கோட்டில் கீழ் இருக்கும் 56 மில்லியன் பட்டினியில் வாடிவதங்கும் சிறுவர்கள் இருக்கும் 80 இற்கும் மேற்பட்ட உலகின் வறிய நாடுகளில் இவ்வமைப்பானது உதவி வழங்கிவருகின்றது. இவ்வமைப்பானது உணவானது ஓர் மனிதனின் அடிப்படை என்கின்ற தத்துவத்தில் இயங்கிவருகின்றது.


உலக வானிலை அமைப்பு

உலக வானிலை அமைப்பானது 1950இல் சுவிஸில் ஆரம்பிக்கப்பட்டது. சர்வதேச காலநிலை பருவகால அவதானிப்பு தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயம்

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம், ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம் எனும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் அரசின் அழைப்பினாலோ ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும்புவதற்கோ மீள்குடியமர்விற்கோ உதவுவதைக் கருப்பொருளாகக் கொண்டதாகும். 1950இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமைந்துள்ளது.

இவ்வமைப்பானது ஐக்கிய நாடுகளின் உதவி மற்றும் மீள்குடியேற்ற நிர்வாகம் மற்றும் சர்வதேச அகதிகள் அமைப்பின் வழிவந்த அமைப்பாகும். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் 1954இ1981 ஆண்டுகளில் சமாதானத்திற்கான நோபல் பரிசினை வென்றுள்ளது. இவ்வமைப்பானது உலகளாவிய அகதிகள் பிரச்சினையை முன்னின்று கவனிப்பதுடன் சர்வதேச அமைப்புக்களுடனும் சேர்ந்து செயற்பட்டு அகதிகளைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றது.




சர்வதேச தொழிலாளர் நிறுவனம்
சர்வதேச தொழிலாளர் நிறுவனம் தொழிலாளர் சிக்கல்களை நிர்வகித்தலும் அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேன்மைப்படுத்தலுமே ஐக்கிய நாட்டு சபையின் சிறப்பு நோக்கங்கொண்ட முகாமையாகும்.


இது 1919இல் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் செயலகம் உலகம் முழுதும் அதன் மூலம் பணியமர்த்தப்பட்டவர்களால் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் என அறியப்படுகிறது. இவ் நிறுவனமானது நோபல் அமைதி விருதினை 1969 ஆம் ஆண்டு பெற்றது




சர்வதேச அணுசக்தி முகவரமைப்பு

சர்வதேச அணுசக்தி முகவரமைப்பு 1957இல் ஒஸ்ரியாவிலுள்ள வியன்னாவில் ஆரம்பிக்கப்பட்டது. அமைதிப்பணிக்கு அணுசக்தியை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.


ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் உலகின் பல்வேறு தொழில்நுட்ப உதவித்திட்டங்களுக்கு உதவி வழங்கும் அமைப்பாகும். அமெரிக்காவில் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதை 1965ஆம் ஆண்டு நிறுவினர். 1990இலிருந்து மனித வளர்ச்சி அறிக்கை மற்றும் மனித வளர்ச்சிச் சுட்டெண் களை வெளியிட்டு வருகின்றது. இதன் மிகப் பெரும் உதவி வழங்கும் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது இதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், ஜப்பான், நெதர்லாந்து, நோர்வே, சுவீடன், ஐரோப்பிய ஒன்றியமும் உதவி வழங்கி வருகின்றன.

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் இலக்குக்கள்
.மக்களாட்சி அரசு
.வறுமை ஒழிப்பு
.கடும் இக்கட்டான நிலையை அடையாமல் காப்பதும் உதவுதலும்.
.எயிட்ஸ்
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டமானது வளர்ந்து வரும் நாடுகளில் சரியான சிறந்த முறையில் பயன்படுத்த உதவி வருகின்றது.


ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பு
ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பானது ஐக்கிய நாடுகளின் குடியமர்விற்கான அமைப்பாகும். இது 1978 இல் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. தலைமை அலுவலகம் நைரோபி கென்யாவில் உள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் சமூக ரீதியாகவும் சூழல் ரீதியாகவும் உலகில் அனைவருகும் போதுமான புகலிடத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
சுனாமியை அடுத்து சமூகத்தை மீள்கட்டியெழுப்புவதில் ஐக்கிய நாடுகள் குடிசார் அமைப்பு பங்காற்றியுள்ளது.


ஜக்கிய நாடுகள் மக்கள் தொகை செயற்பாட்டு நிதியம்

ஜக்கிய நாடுகள் மக்கள் தொகை செயற்பாட்டு நிதியம் நியூயோர்க்கில் ஆரம்பிக்கப்பட்டது. குடும்பநல திட்டம் மற்றும் மக்கள் தேவைக்கேற்ப செயல்புரிகிறது.



ஜக்கிய நாடுகள் சுற்றுப்புறச் செயல்முறைத்திட்டம்

சுகாதாரமான திறன்மிக்க சுற்றுப்புறச்சூழலுக்கான கோட்பாடுகளை வலியுறுத்துவதுடன் மனித சுற்றுப்புறம் சம்பந்தப்பட்ட அலுவல்களில் பன்னாட்டு ஒத்துழைப்பு வழங்குகிறது.







கடல் சார் செயற்பாடுகளுக்கான பன்னாட்டு அமைப்பு

கடல் சார் செயற்பாடுகளுக்கான பன்னாட்டு அமைப்பானது 1958இல் லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. கப்பல் பயணிகளின் உயிர் பாதுகாப்பு வௌவ்வேறு அரசுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் கடல் சார்ந்த முறையான செயற்பாடுகளுக்கு இடையூறாக உள்ள தேவையற்ற சட்டதிட்டங்களை அகற்றுகிறது.


பன்னாட்டு தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் அமைப்பு

பன்னாட்டு தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் அமைப்பானது 1964இல் நியூயோர்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.



மனிதக் குடியிருப்புக்கான ஜக்கிய நாடுகள் நிலையம்

மனிதக் குடியிருப்புக்கான ஜக்கிய நாடுகள் நிலையம் 1978இல் மனிதக் குடியிருப்புக்களின் அபிவிருத்தியை ஊக்குவித்தல், சகலருக்கும் முறையான இருப்பிட வசதி மற்றும் நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி என்பவற்றை ஏற்படுத்தல் இதன் நோக்காகும்.


ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள்
ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகளின் அமைப்பாகும் இது உலகாவிய தன்னார்வலர்களை ஐக்கிய நாடுகளின் பங்காளர்களுக்கு உதவும் வண்ணம் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர் திட்டமானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் நிர்வாகிக்கப் படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது பான், ஜேர்மனியில் அமைந்துள்ளதுடன் ஏனைய நாடுகளில் ஐக்கிய நாடுகள் விருத்தித் திட்ட நாட்டு அலுவலகத்திற்கூடாக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1970 இல் உருவாக்கப்பட்டதாகும். தன்னார்வலர்களை வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து சேர்த்துக்கொள்கின்றார்களெனினும் தற்போது 70 ஆனவர்கள் வளர்சியடைந்த நாடுகளையே சேர்ந்தவர்கள். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் அடிக்கடி அடையாளம் காணப்பட்டு நேர்காணப்பட்டு, ஐக்கிய நாடுகளுடன் கூட்டியங்கும் ஒரு அமைப்பால் திட்டங்கள் பற்றி விளக்கப்படும்.
1971 இல் இருந்து 30000 இற்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் 140 நாடுகளில் பல்வேறுபட்ட திட்டங்களில் பயன்படுத்தப்பட்டனர்.


ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம்
ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம் என்றழைக்கப்படும் திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுலகம் ஐக்கிய நாடுகளின் திட்டங்களை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இது ஐக்கிய நாடுகள்இ சர்வதேச நிதி நிறுவனங்கள் அரசுகளின் திட்டங்களை முன்னெடுக்கும் அமைப்பாகும்.
பத்தாண்டுகளுக்கும் மேலதிகமாக சமாதான முன்னெடுப்பு, அநர்த்த முகாமைத்துவம் மற்றும் தொலைநோக்கிலான வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. பல பில்லியன் டாலர்களுக்கு மேலாக ஓராண்டிற்குச் செலவிடும் இவ்வமைப்பானது ஓர் பொறியியல், கண்ணிவெடி நடவடிக்கை, சூழல் மீளமைப்பு, மீள்புனருத்தாரணம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றது. உலகின் பல்வேறு நாடுகளில் இவ்வமைப்பானது ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றது.


ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விமானச் சேவை
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விமானச் சேவையானது உலக உணவுத் திட்டத்தினால் ஐக்கிய நாடுகள் மற்றும் ஏனைய மனிதாபிமான அமைப்புக்களுக்காக ஆபத்துக்காலத்தில் பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் விமானப் போக்குவரத்தில் ஈடுபட உருவாக்கப்பட்டதாகும்.

ஜக்கிய நாடுகள் சபையானது கிட்டத்தட்ட 50 அமைப்புக்களை கொண்டுள்ளது.

No comments:

Post a Comment