Wednesday, March 23, 2011

ஊடகப் பயிற்சி மாணவர்களின் உள்ளகப் பயிற்சிப் பயணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் முழுநேர கற்கைநெறி மாணவர்கள் உதயனைப் பார்வையிடுவதற்கு 23.03.2011 அன்று சென்றிருந்தனர். 

பத்திரிகையின் மிக முக்கிய நான்கு பிரிவுகளான விநியோகப்பிரிவு, விளம்பரப்பிரிவு,  தயாரிப்பு அச்சிடல்,  ஆசிரியபீடம் என்பனவற்றின்  நடவடிக்கையை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.  முக்கியமாக பத்திரிகை அச்சிடுதல் தொடர்பான நேரடி விளக்கமுறை இயந்திரப்பகுதியில் வைத்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இயந்திரப்பகுதியில் றேசிங் என்ற sheetஇல் தகவல்களை எடுத்து  devoloper என்ற ஒரு வகையான கெமிக்கல் வகையினை அதன் மேல் ஊற்றுகின்றனர். ஒரு முறை உபயோகித்த றேசிங் பேப்பரை மறுபடியும் மீள்சுழற்சிக்கு உட்படுத்த முடியாத காரணத்தினால் அதனை மீண்டும் உபயோகப்படுத்துவதில்லை.  இவ்முறை நேர் அச்சு முறை (obset plate) எனக்
கூறுவர்.

இங்கே முதலில் இரு தடவைகள் proff பார்த்தவுடன் அடிக்கப்பட்டு அதன்
பின் finalஆக மற்றுமொரு  proff  பார்க்கப்படுகின்றது. கலரில் அச்சிடும்
முறையும் காண்பிக்கப்பட்டது. பாரிய இயந்திரங்களில் அச்சிடும் முறை அவை பழுதடைந்து விடும் nhது தாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் என்பவற்றை விரிவாக கூறியிருந்தார்.விநியோகப் பிரிவினை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஏனெனில் பத்திரிகை அதிகாலை வேளையிலேயே விநியோகிக்கப்பட்டிருக்கும். ஆனாலும் பத்திரிகைகளை
திரும்பவும் கொண்டு வந்து அந்த எண்ணிக்கைகளை சரி பார்ப்பதையே காணக் கூடியதாக இருந்தது.

பத்திரிகையில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய பிரிவு விளம்பரப்பிரிவு! அங்கே பார்த்தால் வேலைகளின் மத்தியிலும் சளைக்காது பதிலளித்தனர். front pageக்கு சுமார் 20000 வசூலிப்பதாக கூறினர். மற்றைய ஏனைய விளம்பரங்களின் கட்டணங்கள் அவற்றை எந்தளவில் சரி பார்த்து எடுப்பது பற்றியும் குறிப்பிட்டனர். விளம்பரங்களை உறுதிப்படுத்தப்பட்டு வரும் விளம்பரங்களை தான் தேர்ந்தெடுத்து பத்திரிகையில் போடப்படுகிறது.

பத்திரிகையின் மிக முக்கிய ஆசிரியபீடத்தை சந்திக்கும் வாயப்புக் கிட்டியது. தலைமை ஆசிரியராக தே.பிறேமானந்த் இவரே மாணவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர். இவ்ஊடகத்தை ஏன் தெரிவு  செய்திருந்தீர்கள். எவ்வாறான ஆர்வம் இத்துறையில் இருக்கிறது என மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
கற்கைநெறியை பூர்த்தி செய்தவுடன் முழு நேரமாகவும் அதற்கு முன்னர் பகுதிநேர வேலைவாய்ப்பளிப்பதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

உதயன் பத்திரிகை நிறுவத்தின் வார இதழான சுடர்ஒளி பத்திரிகையின் பணிகளையும் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவர்களின் நூலகத்தினை பார்க்கும் போது பெரும்பாலும் முதல் இதழிலிருந்து எல்லா இதழ்களையும் சேர்த்து வைத்திருந்தனர்.
இந்தப் பயணம் ஊடக கற்கைநெறியைப் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அவர்களுக்கு ஒரு புது உற்சாகத்தை பாய்ச்சுவதாகவும் இருந்ததாக மாணவர்கள் கூறியிருந்தனர்.

No comments:

Post a Comment