Sunday, March 13, 2011

செல்வ ஆக்கங்கள்

இயற்கைப் பெயரிடல்கள்
 சமூக செயற்பாடுகள் பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் போன்றவற்றில் பேரழிவினை ஏற்படுத்தி வளங்களை அருமையானதாகச் செய்யும் இயற்கையின் செயல்பாடுகளே இயற்கைப் பெயரிடல்கள் எனப்படுகின்றன. வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ, நிலச்சரிவு, வறட்சி, நிலநடுக்கம், சுனாமி என்பன இவ் இயற்கைப் பெயரிடல்களாகும்.

இந்தப் பேரழிவால் மிகையான அளவில் பொருட்சேதம், உயிர்ச்சேதம், ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் விவரிக்க இயலாத அளவிற்கு சேதமடைகிறது.
இயற்கையின்  கொடையில்லாமல் உயிர்வாழ்க்கை சாத்தியமில்லை. ஆனால் சில சமயங்களில் இந்த ஐம்பூதங்களே எமது உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தல் விடுவதுமுண்டு. இயற்கை சீறும்போது உயிரனங்களால் அவற்றைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இயற்கையின் சீற்றத்தால் மனித உயிர்களும், அவர்களது சொத்துக்களும் முற்றாக அழிந்துபோன சம்பவங்கள் அடிக்கடி உலகம் முழுவதும் பல பகுதிக­ளில் நடைபெற்று வருகின்றன.

அனர்த்தங்களின்போது சொத்துக்களும் வாழ்வாதாரங்களும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றன. காலத்துடனான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுக்காவிடின் சொத்துக்கள் யாவும் அழிந்துவிடலாம்.  இத்தகைய சந்தர்ப்பங்களின்போது:
.வாழ்வாதாரச் சொத்துக்களைப் பாதுகாத்தல்
.வாழ்வாதாரச் சொத்துக்களைப் பலப்படுத்துதல்
.வாழ்வாதாரத் தெரிவுகளைப் பல்லினப்படுத்துதல், போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சுனாமி



சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை.(சூனாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுக பேரலை)
சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியதே சுனாமி. நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.
சுனாமி பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுக்கிறது.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய பிரிய அதன் தட்ப வெப்ப இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாகின.
இந்த பிளேட்கள் மீது தான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள் தான். இதைத் தான் 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சுனாமி ஏற்படும் சந்தர்ப்பங்கள்.
.கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.
.கடலாழ பூகம்பத்தினால் வரும்
.கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.
.மலையில் எரிமலை உண்டாகி அதனால் வரும்.
.வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு
.கடலில் பௌதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.

சுனாமி முதன் முதலில் கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

சுனாமி ஏற்பட்ட சில ஆண்டுகளும் இடங்களும்.
1700 -ஜனவரி- அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன், கொலம்பியா ரிக்டர் 9 புள்ளிகள் (இதை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது).
1730 ஜூலை-சிலி ரிக்டர் 8.7 புள்ளிகள்-3000பேர் பலி
1755நவம்பர்-போர்ச்சுகல் லிஸ்பனில்- ரிக்டர் 8.7- 60000 பேர் பலி
1868 ஆகஸ்ட்- சிலி- ரிக்டர் 9 (இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள் தென் அமெரிக்காவை தாக்க இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்)
1883-இந்தோனேசியா-36000 பேர்
1896-ஜப்பான்-2700 பேர் (100 அடி உயரத்திற்கு அடித்தது.)
1906 ஜனவரி-ஈகுவெடார், கொலம்பியா ரிக்டர் 8.8- 500 பேர் பலி
1946 ஏப்ரல்- யுனிமாக் தீவுகள்  ரிக்டர் 8.1 - அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க 165 பேர் பலி

1960 மே -தெற்கு சிலி -ரிக்டர் 9.5 - 1,716 பேர் பலி
1964 மார்ச்- அமெரிக்கா பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதி- ரிக்டர் 9.5 அலாஸ்காவின்  131 பேர் பூகம்பத்தால் பலி- 128 பேர் சுனாமியால்  பலி
1976 ஆகஸ்ட்- பிலிப்பைன்ஸ்- ரிக்டர் 9.2 - 5ஆயிரம் பேர் பலி
1988-இத்தாலி-1200 பேர்
1923-ஜப்பான் 1 லட்சம் பேர்
1933-ஜப்பான்-30000 பேர்
2004 டிசம்பர்- இந்திய பெருங்கடலில்-ரிக்டர் 9 - இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2007 ஏப்ரல்- சாலமன் தீவுகள்- ரிக்டர் 8.1 - 28பேர் பலி
2009 செப்டம்பர்- தெற்கு பசிப்பிக்- ரிக்டர் 8 - 194 பேர் பலி
2010 ஜனவரி- ஹெய்தி- ரிக்டர் 7- 3 லட்சம் பேர் பலி, அக்டோபர் இந்தோனேசியா சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலி


சுனாமி எச்சரிக்கை அமைப்பு
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாகின.

அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்களுக்கு  சலிப்பை ஏற்படுத்தின. சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து 'சுனாமி மிதவை கருவி' கண்டுபிடிக்கப்பட்டது.

1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே பாதுகாப்பு ஏற்பாடுகளால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டதால் 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள்  (ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா) உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு  செய்யப்பட்டு  இவ் நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன் அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.
இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.




2011 March 11இல்  சுனாமி 
கடந்த மார்ச் 11இல் ஜப்பானை 8.9 ரிக்டர் அளவில் பூகம்பம் தாக்கியுள்ளது.
 (ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்த நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், அங்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை பெருமளவில் பயனளித்து வருகின்றன.  1952ல் ஜப்பான் வானிலை மையத்தால் சுனாமி எச்சரிக்கை சேவை துவங்கப்பட்டது.)

ஜப்பானின் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் அங்கு புறப்படும் சுனாமி அலை மணிக்கு 500 மைல் வேகத்தில் பசிபிக் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதிகளை 24 மணி நேரத்திற்குள் தாக்கும் என்பதால் அப்பிராந்திய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலைகளின் உயரம்15 அடி முதல் 21 அடி உயரம் வரை இருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பசிபிக் பிராந்தியத்தில் உள்ள குவாம், தைவான், ஹவாய், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பப்புவா நியூகினியா, சமாவோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹவாய், வட அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மெக்சிகோ, மத்திய அமெரிக்காவின் நிகரகுவா, தென் அமெரிக்காவின் பெரு, சிலி ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தனர்.இவை தவிர சிறு தீவு நாடுகளான பிஜ, கவுதமாலா, எல் சல்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால், ஹவாய் தீவுக்கு சுற்றுலா வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் உடனடியாக ஆபத்தான கடற்கரைப் பகுதிகளில் இருந்து, உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். ஜப்பானின் வடபகுதியில் உள்ள குரில் தீவுகளில் இருந்து, 11 ஆயிரம் மக்களை ரஷ்ய அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்கு ஆபத்தில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

ஜப்பானில் தொடர்ந்தும் நிலநடுக்கம் சுனாமி காரணமாக பதற்றநிலை காணப்படுகிறது. ஜப்பானின் வடக்கு கடலோர பகுதிகள் அதிகம் பாதிப்படைந்துள்ளன. 13 அடி நீளத்தில் கடலலைகள் உயர்ந்தன. ஜப்பானின் நாடாளுமன்றமும் இவ்வனர்த்தத்தினால் குலுங்கியது. 89 ஆண்டுகளின் பின் பயங்கர சுனாமி தாக்கியுள்ளது. விமான நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. இசிஹாரா பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் வெடித்துச் சிதறியது. நென்டாய் துறைமுகம் பெரும் நாசத்தை எதிர்நோக்கியுள்ளது. 5 அணு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மின்சார ரயில்களில் ஏற்பட்ட கோளாறுகளையடுத்து முடக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து தைவானை மினி சுனாமி தாக்கியுள்ளது. இந்தோனேசியா பாலித்தீவுகளில் 6.5 ரிக்டர் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
 தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர சுனாமியால்  மியாகி சென்டாய் நகரம் முற்றாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. செண்டாய் நகரில் உள்ள வகாபாயாஷி பகுதியில் 300 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்தவர்களை காணவில்லை. சென்டாய் - இஷினோமேகி பகுதிக்கு இடையே சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த பயணிகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. இதே போல, ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை காணவில்லை. எனவே, சுனாமியால் பலியான நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்கள் கழித்து இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசியா தீவுக் கூட்டத்தில் உள்ள சியாவூ தீவில் உள்ள கரங்கடெங் எரிமலை வெடிக்க துவங்கியுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 5,853 அடி உயரத்தில் உள்ள இந்த எரிமலையில் இருந்து நேற்று நெருப்புக் குழம்பும் புகையும் வெளிப்பட துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுனாமியைத் தொடர்ந்து ஆசிய பங்குச் சந்தை பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளன.

No comments:

Post a Comment