சிங்காரச் சென்னை இந்திய நாட்டின் ஒரு பகுதி! இங்கு பல வர்க்க மக்கள் வசிக்கின்றார்கள் தினம் தினம் விமானத்தில் பறந்து கொண்டு இருப்பவர்கள் இங்கு தான் இருக்கின்றார்கள். விமானத்தை அருகே பார்த்தவனும் இங்கு தான் இருக்கின்றான். பணக்காரன் மென்மேலும் செல்வம் சேர்த்துக் கொண்டிருக்க ஏழை கணத்திற்கு கணம் வறுமைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றான். இச் சென்னையில் சேரிப்புறங்கள் நிறைந்து இருக்கின்றன. சேறும் சகதியுமான இப்பகுதியில் ஒன்றான பம்பிங்ரேசன் பகுதியைப் பற்றிப் பார்ப்போம்.
Wednesday, January 4, 2012
Tuesday, January 3, 2012
கொழும்பில் ஊடகப் பயிற்சிப் பயணம்
அனுபவங்கள் தான் மனிதனை செம்மையாக்குகின்றது. எம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் எம்மை தூக்கி நிறுத்துகின்றன. வெற்றி தோல்வியை சமதளத்தில் வைத்து எம்மையே பூர்த்தி செய்ய வைக்கின்றது.
நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் முழுநேர இதழியல் கற்கைநெறி பயிலும் மாணவி. பரீட்சை முடிந்தவுடனேயே எமக்கான உள்ளகப் பயிற்சிப் பயணம் கொழும்பை நோக்கி ஆரம்பித்தது.
நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் முழுநேர இதழியல் கற்கைநெறி பயிலும் மாணவி. பரீட்சை முடிந்தவுடனேயே எமக்கான உள்ளகப் பயிற்சிப் பயணம் கொழும்பை நோக்கி ஆரம்பித்தது.
‘ஒளிச் சமிக்ஞைகள்’ அற்ற காப்பற் வீதிகளால் ஏற்படும் விபத்துக்கள்
‘‘நேரமாகிப் போய்ட்டுது இன்டைக்கு எப்படியும் ஒபீஸில் பேச்சுத் தான் கேட்கப் போறேன். உந்த பாழாய்ப் போன றோட்டும் ஒரே நெரிசல். உதுக்குளால போய் வாறதை நினைக்கேக்கை..’’ பெரும்பாலான வீடுகளில் காலை வேளையில் இப்படித் தான் முணுமுணுப்பு!
அவசர பணிக்குப் போகிறவர்களுக்கும் சரி பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் சரி பெருத்த தலையிடியாக இருக்கிறது இந்த போக்குவரத்து நெரிசல்!
பிராந்தியப் பத்திரிகைகளில் கேலிச்சித்திரம்
நகைச்சுவை உணர்வினைத் தூண்டும் வகையில் வரையப்படுபவை கேலிச்சித்திரங்கள். பல சொற்களில் தலையங்கம் எழுதி உணர்த்த முடியாத கருத்துக்களைக் கூட கேலிச்சித்திரங்கள் இலகுவில் உணர்த்தி விடுகின்றது.
கேலிச்சித்திரங்கள் ஊடகங்களிலே குறிப்பாக பத்திரிகைத்துறையில் பெருமளவில் வளர்ச்சி பெற்று வருகின்றன. எனினும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் கேலிச் சித்திரங்களோ தொடர் சித்திரப் படங்களோ பெரிதளவில் வெளிவருவதில்லை.
“எங்களை எழுப்பினால் நாங்கள் எங்கே போவம்”…?
‘‘எங்களை எழுப்பினா நாங்க எங்க போவம் என்னோட படிக்கிற பிள்ளைகளை எல்லாம் பிரிய வேணும் என்னம்மா’’ என்று தனது தாயிடம் சிணுங்குகிறாள் கொக்குவில் இராமகிருஷ்ணாவில் படிக்கும் மாணவியொருத்தி!
யாழ்ப்பாணத்திற்கு தண்ட வாளம் போடப்படப் போகிறது; ரயில் வரப் போகிறது. குடாநாட்டு மக்கள் எல்லாரும் சந்தோசக் கடலில் நீந்த தண்டவாளத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பாளர்கள் துன்பத்தில் இருக்கின்றனர்.
![]() |
| புகையிரத நிலையத்தை அண்டிய குடியிருப்புக்கள் |
''பயிற்சி நிலைய வெளியீடுகளை வெளியுலகிற்கு கொண்டு வர வேண்டும்'' சண்டே ஒப்சேவர் துணை ஆசிரியர்
கொழும்பு லேக்கவுஸ் நிறுவனத்தின் வார இதழான சண்டே ஒப்சேவர் துணை ஆசிரியர் அனந்தபாலகிட்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்தார். திங்கட்கிழமை (18.04.2011) அன்று முழு நேரக் கற்கைநெறி மாணவர்களுடனான விசேட விரிவுரையும் கலந்துரையாடலும் இடம்பெற்றது. அப்போது ஊடக வளங்கள் பயிற்சி நிலைய மாணவர்களிற்கு அவரளித்த செவ்வி...
இலத்திரனியல் வளர்ச்சி ஊடகத்துறையின் வரப்பிரசாதம்
காலம் போகின்ற வேகத்திலே உலகில் பற்பல முன்னேற்றகரமான சம்பவங்கள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்தி மனித வாழ்வில் உயிர் நாடியாகத் துடித்துக் கொண்டிருக்கும் இலத்திரனியல் துறையானது புரியும் விந்தைகளோ அதிகம்.
Subscribe to:
Posts (Atom)
