Tuesday, January 3, 2012

இலத்திரனியல் வளர்ச்சி ஊடகத்துறையின் வரப்பிரசாதம்

காலம் போகின்ற வேகத்திலே உலகில் பற்பல முன்னேற்றகரமான சம்பவங்கள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்தி மனித வாழ்வில் உயிர் நாடியாகத் துடித்துக் கொண்டிருக்கும் இலத்திரனியல் துறையானது புரியும் விந்தைகளோ அதிகம். 
                 
 


புதிய ஊடகம் எனும் இணையம் ஊடகத்துறையில் எண்ணற்ற மாற்றங்களை உண்டுபண்ணி உள்ளது. எங்கும் இணையம் எவரிலும் இணையம்! ஒருவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு தற்போது பத்திரிகையையோ வானொலியையோ தொலைக்காட்சியையோ நம்பிக் கொண்டு     இருக்கத் தேவையில்லை.                  


இன்றைய ஊடகங்கள் எண்ணிறைந்த அளவு வளர்ச்சி கண்டுள்ளன. இணையத்தில் எத்தனையோ சமூக வலைத்தளங்கள்! அவை எல்லாம் புதிய ஊடகத்தின் வெளிச்சமே! இப்போது எல்லாமே ஒன்லைன் வெப்பத்தளங்கள் என வந்திருக்கின்றது. இதனால் ஒரு போட்டித் தன்மை இருக்கத் தான் போகிறது. ஆனால்இ வேலைக்குப் போகின்றவர்களோ அல்லது பாடசாலைக்குப் போகிறவர்களோ உடனே பத்திரிகையை வாங்கி படித்து விட்டுப் போகும் நிலையும் இருக்கிறது.                               
இருபதாம் நுற்றாண்டின் ஆரம்பத்திலே முளை விட்டிருந்த இலத்திரனியல் துறையானது 21ஆம் நூற்றாண்டிலே பெருவிருட்சமாய்த் தளைத்து விட்டதன் பயனாக எத்தனையோ பல சாதனைகள் நிகழ் த்தப்பட்டுள்ளன.                      


கல்வி, மருத்துவம், விவசாயம், வானியல், போக்குவரத்து எனச் சகல துறைகளிகளிலும் இலத்திரனியல் துறை புகுந்து விட்டதால் உலகமே இன்று கிராமாமாக மாறி வருகிறது.                 
இன்று அனைவரதும் கைகளிலும் தவழும் கையடக்கத் தொலைபேசியினால் அவர்கள் பெறும் நன்மைகளோ ஏராளம். மேலும் கூடுதல் வசதியாக கைத்தொலை பேசியில் இணையம் மெதுவாக புதிதாக தன்னை இணைத்துக் கொண்டு விட்டது.         


இப்போது புகைப்படத்தினூடாக செய்தியை சொல்லுகின்ற பாங்கு வளர்ந்து வருகிறது. யாராக இருந்தாலும் சரி அவர் தனது மொபைல் கமெராவினூடாக புகைப்படத்தை எடுத்து விற்று விட்டுப் போகக் கூடியளவிற்கு புகைப்படத்துறையும் வளர்ந்து விட்டது.                              


இலத்திரனியல் சாதன வளர்ச்சியினால்  ஊடகத்துறையின் வேலையும் குறைவடைந்து விட்டது என்றே தான் சொல்ல வேண்டும். சரித்திரங்களை தெரிந்து கொண்டு புதிய வற்றிற்கு ஏற்ப அவற்றை மாற்றியமைக்கும் வசதி இதனால் கிடைத்துள்ளது.             


இலத்திரனியல் இன்று மனிதவாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்டது.  மனிதர் களது வேலையை சுலபமாக்குகின்ற ஒரு சாதனமாக இலத்திரனியல் வளர்ந்து இருக் கின்றது; மென்மேலும் வளர்ச்சி பெற்றும் வருகிறது. ஊடகத்துறையிலும் பாரிய புரட்சியொன்று இலத்திரனியல் வளர்ச்சியினால் ஏற்பட்டு வருகிறது; இன்னும் ஏற்படும்.


கடிவாளம் 03இன் ஆசிரியர் தலையங்கம்
மு.கௌசிகா

No comments:

Post a Comment