Friday, January 6, 2012

மக்கள் பாதுகாப்பிற்காக பொலிசாரின் புதிய திட்டம்

அரியாலை கிழக்கு நாவலடிப் பிரதேச மக்கள் மீள்குடியேறி சுமார் ஒரு வருடமாகி விட்டது. இப்பிரதேச மக்களது பாதுகாப்பிற்காக பொலிஸ்பிரிவு ஒரு புதிய திட்டத்தை அமுல்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இங்கு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக இருபது பேர் கொண்ட அமைதிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த அமைதிக்குழுவில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அங்கத்துவம் வகிக்கின்றார்கள். இங்கு நிலவும் பாதுகாப்பு பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக் கொள்கின்றனர்.



இதுபற்றி அவ்அமைதிக்குழுவில் உள்ள சாந்தகுமாரி றுகையில், “அமைதிக்குழு என்டு ஒன்று வந்ததால எங்கட இடத்தில வாற பிரச்சினைகளை எங்களால தீர்த்துக் கொள்ள முடியுது. அதுக்குப் பிறகு எங்கட இடத்துக்கு பொறுப்பாக இருக்கிற பொலிஸ் அதிகாரி வந்து என்னென்ன பிரச்சினைகள் இருக்குது என்டு கேட்பார். எங்கட மக்களுக்கு இந்தக் குழுவால நன்மை இருக்கு’’ என்றார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே! அக்குழுவில் ஆண்கள் இடம்பெற்றிருக்கின்றனர். இந்நிலையிலேயே முதன்முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய அமைதிக்குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது விசேடமாகும்.

No comments:

Post a Comment