Tuesday, January 3, 2012

பிராந்தியப் பத்திரிகைகளில் கேலிச்சித்திரம்


நகைச்சுவை உணர்வினைத் தூண்டும் வகையில் வரையப்படுபவை கேலிச்சித்திரங்கள். பல சொற்களில் தலையங்கம் எழுதி உணர்த்த முடியாத கருத்துக்களைக் கூட கேலிச்சித்திரங்கள் இலகுவில் உணர்த்தி விடுகின்றது.   
            
கேலிச்சித்திரங்கள் ஊடகங்களிலே குறிப்பாக பத்திரிகைத்துறையில் பெருமளவில் வளர்ச்சி பெற்று வருகின்றன. எனினும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் கேலிச் சித்திரங்களோ தொடர் சித்திரப் படங்களோ பெரிதளவில் வெளிவருவதில்லை. 
                
கேலிச்சித்திரம் என்பது ஒரு கலை வடிவம். 1865ஆம் ஆண்டில் சமூக மறுமலர்ச்சிக் காலத்திலே இந்தப் புதுமையை வால்ற் டிஸ்னி ஆரம்பித்து வைத்தார். ஒரு குறித்த கருத்தினை மக்கள் மத்தியில் தெளிவான தாக ஊட்டுவதற்குஇ கொண்டு சேர்ப்பிப்பதற்கு ஒரு சிறந்த ஊடகமாக காணப்படுகின்ற கேலிச்சித்திரங்கள் புதுப் பொலிவு பெற்று வருகின்ற கலை வடிவம்.  
                 
1921ஆம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டியொன்று நடத்தப்பட்டது. அதில் சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ‘பஞ்ச் Cartoon என்ற பெயரில் பிரசுரித்தது. காலப்போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு ஊயசவழழn என்ற பெயர் நிலைத்து விட்டது. எந்தவொரு விடயத்தையும் நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்துவதாக கேலிச்சித்திரங்கள் அமைகின்றன.   
                          
தமிழ்நாட்டில் பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சியின் குறைகளை ‘இந்தியா’ எனும் இதழில் கேலிச்சித்திரங்களாக அமைத்து வெளியிட்டார். ஈழத்தில் சிரித்திரன் இதழில் வெளிவந்த சித்திரங்கள்; மிகவும் பிரபலமடைந்த கேலிச் சித்திரங்களாகின.   
           
யாழ்ப்பாண தமிழ்ப் பத்திரிகைகளிலே குறிப்பாக ஈழநாடு பத்திரிகையில் சமுதாயக் கருத்துக்களை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுவதற்குரிய சாதனமாக கேலிச்சித்திரங்கள் அமைந்திருந்தன. நீண்ட காலமாக உதயன் பத்திரிகையில் ‘முச்சந்தி முரளி’ எனும் கேலிச் சித்திரம் வெளிவந்தது.  
          
தற்போது யாழ்ப்பாணத்தில் பல தினசரிப் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவை எவற்றிலும் பெரிதாக  இக் கேலிச்சித்திரங்களை காணுவது அரிதாக உள்ளது. தினக்குரல் நாளிதழில் இச்சித்திரங்கள் பல வெளியிடப்பட்டு வந்து கொண்டிருப்பதான நிலைமை வரவேற்கத்தக்க விடயமாகும்.   
                      
ஆங்கில இதழ்களில் கேலிச்சித்திரங்களின் வரலாறு எப்போதுமே நல்ல பாதையில் தான் இருந்து வருகின்றது.  
          
புதிய ஊடகமான இணையமும் கேலிச் சித்திரங்களிற்கான கதவை திறந்து வைத்துக் கொண்டி ருக்கின்றது. தினசரி நாளிதழ்கள் பிரசுரிக்காத இக்கேலிச்சித்திரங்களை  இணையத்தளங்கள் போடுகின்ற நிலைமை கேலிச் சித்திரத்தின் சிறந்த புதுப்பாதை என்றே கூற வேண்டும்.                  கேலிச் சித்திரங்கள் அதிகமாக மனிதர்களை அவர்களின் கொள்கைகளை கேலி செய்யும் விதமாக வரையறுக்கப்படுகின்றன. 

கேலி செய்யப்படுபவர்களின் படங்களை நகைச்சுவை உணர்வுடன் அவர்களின் உருவம் அனைவரும் அறியும் விதத்தில் வரையப்படுகின்றது. வரையப்படும் படங்கள் உண்மையின் அடிப்படையிலும் மக்களுக்கு சில செய்திகளைக் கூறும் வகையில் அதே சமயம் சிந்திக்க வைக்கும் வகையில் வரையப்படுகின்றது.     
                
இந்தக் கேலிச்சித்திரங்கள் பிறர் மனதை புண்படுத்தாத வழியில் வரையறுக்கப்பட்டாலும் கூட கேலிச்சித்திரக் கலைஞர்களஇ; சிலரால் மிரட்டப்படுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது.                  

இந்த நிலைமை மாற்றத்திற்குள்ளாக வேண்டும். புதுப்புதுக் கருத்துக்களை கூறுவதற்கு ஏற்ற ஊடகம் இக்கேலிச்சித்திரமே! வாசித்தறிய முடியாத பாமர மக்களாலும் புரிந்து கொள்ள முடியும். படிப்பறிவற்றவர்களுக்குக் கூட கருத்துக்கள் சென்றடைய வேண்டுமென்றால் பத்திரிகைகளில் கேலிச்சித்திரங்களின் வரவு நிச்சயம் தேவை. மாற்றங்கள் வரவேற்கத்தக்க முடிவுகளை ஏற்படுத்தி வரும் சிறந்த சாதனம்.

கடிவாளம்-03
மு.கௌசிகா



No comments:

Post a Comment