Tuesday, January 3, 2012

''பயிற்சி நிலைய வெளியீடுகளை வெளியுலகிற்கு கொண்டு வர வேண்டும்'' சண்டே ஒப்சேவர் துணை ஆசிரியர்

கொழும்பு லேக்கவுஸ் நிறுவனத்தின் வார இதழான சண்டே ஒப்சேவர் துணை ஆசிரியர் அனந்தபாலகிட்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்தார். திங்கட்கிழமை (18.04.2011) அன்று முழு நேரக் கற்கைநெறி மாணவர்களுடனான விசேட விரிவுரையும் கலந்துரையாடலும் இடம்பெற்றது. அப்போது ஊடக வளங்கள் பயிற்சி நிலைய மாணவர்களிற்கு அவரளித்த செவ்வி...


                    
   

கேள்வி- உங்களுடைய ஊடகப் பயணம் எவ்வாறு அமைந்திருக்கிறது?
பதில்- இன்று உங்கள் மத்தியில் இருப்பது எனது வாழ்க்கையிலே உண்மையிலே மகிழ்ச்சிகரமான ஒரு நிகழ்வு என நான் நினைக்கிறேன். வாழ்க்கையில் கிடைத்த ஒரு முக்கியமான அனுபவமாக இதைக் கருதுகிறேன்.

சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எனது இப்பத்திரிகைத்துறைப் பிரவேசத்தை முதலில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தேன். ஈழநாட்டுப் பத்திரிகையில் பணிபுரிய ஆரம்பித்தேன். அப்பொழுது இன்று இங்கு இருப்பதைப் போல எந்தவொரு ஊடகவியற் பயிற்சி நிலையங்களும் இல்லை.
இன்று உங்களுக்கு இருப்பதைப் போன்ற பயிற்சி மிக்க விரிவுரையாளர்களும் இல்லை. இன்று  ஊடக வளங்கள் நிறுவனத்திலே நீங்கள் பத்திரிகை வானொலி தொலைக்காட்சி போன்ற துறைகளை கற்றுக் கொள்கிறீர்கள். இது வரவேற்கத்தக்க மாற்றம் தான்.



கேள்வி- யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையிலே தமிழ்ப் பத்திரிகைகள் தான் அதிகமாகக் காணப்படுகின்றது. ஆங்கிலப் பத்திரிகைகள்  எதுவுமே இல்லை. நீங்கள் இப்பொழுது ஆங்கிலப் பத்திரிகையில் இருந்து வருகிறீர்கள். ஆங்கிலப் பத்திரிகையினுடைய செல்வாக்கும் தமிழ் பத்திரிகையின் செல்வாக்கும் எவ்வாறு வாசகர் மத்தியில் போய்ச் சேர்கின்றது?

பதில்- அடிப்படையிலே பத்திரிகைத்துறை என்று வரும் போது அதனுடைய அடிப்படை அம்சங்கள் ஒரே விதமானவை தான். அது ஆங்கிலப் பத்திரிகையாக இருக்கலாம் அல்லது தமிழ்ப் பத்திரி கையாக இருக்கலாம். எந்தவொரு மொழிப் பத்திரிகையாக இருந்தாலும் அடிப்படையிலே  மொழி வேறுபாடுகள் இருக்கலாமே தவிர அடிப்படையான அம்சங்கள் பத்திரிகைத் துறையிலே யாவருக்கும் பொதுவானவை.

அந்தவகையில் தமிழிலே தான் ஈழநாடு நிறுவனத்திலே எனது பணியை ஆரம்பித்தேன். சுமார் ஏழு வருடகாலம் வரை இந்த நிறுவனத்திலே ஊடகவியலாளராக பணிபுரிந்தேன். இதன் பின்னர் நானாகவே நீங்கி இந்த ஆங்கிலத் துறையிலே பணியாற்றத் தொடங்கினேன்.
குறிப்பாகச் சொன்னால் எனக்குப் பயிற்சியைத் தந்தவர்கள் சிரேஷ்ட ஆசிரியராக இருந்தவர்கள்; தான். இப்போது தான் அவர்களைப் பற்றிய அருமை எனக்குத் தெரிகின்றது.

இன்று நான் பணியாற்றுகின்ற நிறுவனத்திலே இருக்கின்ற  சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்குஇ  அன்றைய சிரேஷ்ட ஆசிரியர்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை. அவர்களை விட சில சில கட்டடங்களிலே மேம்பட்டவர்களாகவும் இருந்தார்கள்.

இன்று உலகளாவிய ரீதியில் அனைத்து மொழிகளிலும் பத்திரிகைத் தொழில் மிகவும் களைகட்டி இருக்கின்றது. சீனா, யப்பான் போன்ற நாடுகளில் பார்க்கப் போனால் அங்கு தாய்மொழியினூடாக அவர்களுடைய பத்திரிகைத்தொழில் மிகவும் பிரமாதமாகவே இருக்கின்றது. அதே போல ஜரோப்பிய நாடுகளிலும் பத்திரிகைத்துறைப் பிரவேசங்கள் மிக அருமையானதாக இருக்கின்றது.
அந்தந்த மொழிப் பத்திரிகைகள் அந்தந்த மொழித் தொலைக்காட்சி ஊடகங்கள் என்பவை எல்லாம் அவ்வாறான தமக்குரிய மார்க்கங்களிலே சென்று கொண்டிருக்கின்றன.


கேள்வி- வளர்ந்து வரும் ஊடக மாணவர்கள் எவற்றையெல்லாம் நுணுக்கமாக கற்றுக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?

பதில்- ஒரு journalist என்று இருப்பவர் எப்போதுமே மாணவராகத் தான் இருக்க முடியும். ஒவ்வொரு நாளும் நான் என் வேலைக்கு வந்தவுடனேயே ஆரம்பிப்பது தேடல் தான்.
5றுஇதற்குள் தான் தேடல் ஆரம்பிக்கிறது. இந்த அடிப்படை அம்சத்திற்குள் எங்கள் செய்திகளை கொண்டு போக வேண்டும். நாங்கள் பத்திரிகைத்;துறையை ஆரம்பித்த காலம் போல இன்றைய காலம் இல்லை.
பத்திரிகைத்துறை என வரும் பொழுது ஒன்றையும் நாம் விலக்க முடியாது. இதிலே தான் அனுசரித்துப் போகின்ற பண்பு இருக்கிறது. அதுவே இந்த ஊடகத்துறையிலே இருக்கின்ற தனித்துவமும் மகத்துவமும் என்கிறேன் நான். பத்திரிகையாளர் களாக இருக்கப் போகின்ற நீங்கள் எப்போதுமே தேடலைத் தான் மேற்கொள்ள வேண்டும்.  

இங்கே இருக்கின்ற வளங்களைக் கொண்டு வெளி யீடுகளை மேற்கொள்ளலாம். இங்கு கல்வி பயிலும் மாணவர்களை வைத்து ஒலிபரப்புச் சேவை யினையும் பத்திரிகையினையும் ஆரம்பிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆழ்மனத்தின் வேண்டுகோள்.



கேள்வி- இப்போது இணையவசதி தொலைக்காட்சி வானொலி என எலக்ரோனிக் மீடியா வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனுடைய தாக்கம் பத்திரிகைத்துறையில் எவ்வாறானதாக இருக்கிறது?

பதில்- நான் இந்த துறைக்குள் பிரவேசித்த போது விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மாத்திரம் தான் இந்த ஊடகத்துறையில் பிரவேசித்தார்கள். அப்போது நாங்கள் எமது செய்தியாசிரியரிடம் மட்டும் குட்டு வாங்கவில்லை. அச்சுக் கோப்பவர்களிடமும் குட்டு வாங்கி பேச்சு வாங்கித் தான் பணியை மேற்கொண்டிருந்தோம். இந்த அச்சுக் கோர்ப்பது அந்தக் காலத்திலே கடினமான  நடவடிக்கை. இப்போது நினைத்த மாத்திரத்தில் கணணியில் வடிவமைக்கலாம். அந்தளவிற்கு இலத்திரனியல் வளர்ச்சி கண்டிருக்கிறது.



கேள்வி- பத்திரிகைத்துறையின் எதிர்காலம் பற்றி நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

பதில்-  என்னுடைய நிறுவனத்திலே ஆசிரியர் சொல்லுவார். பத்திரிகை ஜேர்னலிசம் என்பது எவ்வளவு காலத்திற்கு தாக்குப் பிடிக்குமோ என்று! இப்போது பொதுவாக பத்திரிகைகள் அனைத்துமே  ஒன்லைன் வெப்பத்தளங்கள் என வந்திருக்கின்றன. இதனால் ஒரு போட்டித் தன்மை இருக்கத் தான் போகிறது. இப்போது புகைப்படத்தினூடாக செய்தியை சொல்லுகின்ற பாங்கும் வளர்ந்து வருகிறது. ஆனால் இலத்திரனியல் வளர்ச்சிகள் ஏற்பட்டாலும் பத்திரிகைத்துறை முழுமையான வீழ்ச்சியை எதிர்நோக்காது என்பது நிச்சயம்.


கடிவாளம் 03
நேர்காணல்- மு.கௌசிகா- க.அரிகரன்

No comments:

Post a Comment