Wednesday, December 7, 2011

சொந்த வாழ்வு நோக்கிப் பயணிக்கும் தெல்லிப்பளை வாசிகள்- வீதிப் புனரமைப்பு


யூனியன் கல்லூரிக்கு முன்னர் உள்ள வீதி புனரமைக்கப்படுகின்றது.

சொந்த வாழ்க்கைக்கு தயாராகும் தெல்லிப்பளை வாழ் மக்கள்

தெல்லிப்பளை செல்வாபுரம்
யுத்தத்தின் கோரத்தால்
சொந்த மக்களின்றி வாடிய பயிர்!

இருபத்தொரு வருடங்கள் வேற்றுநிலப் புகலிடம்
சொந்த இடத்தின் காதலை புறந்தள்ளி
சொந்த உறவுகளைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம்
யுத்தத்தால்...

யுத்தம் தந்த வடுக்கள்
அப்படியே நெஞ்சுக்குள் ஓரமாக இருக்க
இன்று சொந்தவீடு சேர்ந்த மகிழ்ச்சியில்
புதிதாக மனைகளை
எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

Friday, November 11, 2011

வேதனையாகிப் போன அனுபவம்...

சேதி சொல்லும் பேனாக்கள் (தென்னிந்தியப் பயணப்பதிவு)





இந்தியா
எம் ஊடகப் பயணத்திற்காக
தெரிவு செய்த நாடு!


சென்னை மாநகரத்தில் ஆரம்பமானது
எம் பயணம்…







Thursday, July 14, 2011

தொலைபேசியைக் குத்திய இணையம் மீண்டும் அதைப் பாதுகாத்து மாணவர்களை குத்திக் கிழிக்கிறதா?

யாரது யாரது சொல்லாமல் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது சமீபத்தில் எல்லோரின் முணுமுணுப்பையும் தாண்டி ரிங்ரோனாக மாறிப் போன பாடல். திரைப்படங்கள் வர்த்தகக ரீதியானவை. அதன் போக்கு அப்படித் தான் என்ற வரைமுறை இருக்கிறது. அதற்குள்ளே நாம் ஏன் போக வேண்டும்.  எல்லாருடைய கையிலும் தொலைபேசி பள்ளி மாணவர்களிடையே மீள முடியாத போதைப் பழக்கம் என்று பலரும் சொல்கிறார்கள்!

Tuesday, July 5, 2011

போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் பண்ணை வீதிப் புனரமைப்பு பணிகள்

யாழ்ப்பாணத்திலிருந்து வேலணைக்கு செல்லும் தரைமார்க்கம் பண்ணை வீதி தான். அதனூடாகவே மக்கள்  தமது போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டும். அவ்வீதியின் அகலமாக்கல் புனரமைப்பு பணிகள் பல மாதங்களாக இடம்பெற்று வருகின்றன.



Tuesday, June 28, 2011

பயில் நிலம் - 01கடிவாளம் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணப் பல்கலைகழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய (mrtc) முழுநேர டிப்ளோமா மாணவர்களின் பயில் நிலம் - 01|இன் பயிற்சி இதழான ~கடிவாளம்| வெளியீட்டு விழா ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய மண்டபத்தில் எதிர்வரும் 29.06.2011 புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

தலா ஜந்து மணவர்கள் தனித்தனிக் குழுவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு பத்திரிகையை தயரித்துள்ளது. இவ்வாறு கடிவாளம் 01 முதல் 08 வரை எட்டு இதழ்கள் வெளியிடப்பட உள்ளது.

இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரன் கலந்து கொள்ளவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கவுள்ளனர்.




எனது 3ஆம் குழு மாணவர் படைப்பு
இக் கடிவாளம் இதழ்
வாழ்த்துக்கள் வேண்டி நிற்கின்றோம்...