Tuesday, July 5, 2011

போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் பண்ணை வீதிப் புனரமைப்பு பணிகள்

யாழ்ப்பாணத்திலிருந்து வேலணைக்கு செல்லும் தரைமார்க்கம் பண்ணை வீதி தான். அதனூடாகவே மக்கள்  தமது போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டும். அவ்வீதியின் அகலமாக்கல் புனரமைப்பு பணிகள் பல மாதங்களாக இடம்பெற்று வருகின்றன.





வீதியை அகலமாக்கி பாலமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றது. எனினும் வீதிப் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வந்தாலும் குன்றுங்குழியமாக காட்சியளிக்கும் வீதி மக்களின் அன்றாட போக்குவரத்தினை தடைசெய்கின்றன.


எதிர்எதிராக வாகனங்கள் சந்திக்கும் போது போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்ட விடுகின்றது. வீதியினை சூழ வாகனங்கள் கட்டுமானப் பொருட்கள் இருகே புனரமைப்பப் பணி என நிறைந்திருக்கிறது பண்ணை வீதி அச்சமயத்தில் போக்குவரத்தில் தாமதம் தான் ஏற்படுகிறது.



தத்தமது கடமைகளை நேரத்திற்கு செய்வதற்கு பொதுமக்களால் முடியவில்லை. இவ்வீதி பயணம் செய்வோரை தாமதமாக்கி விடுகின்றது. பாலத்தின் புணரமைப்பு முடிவடைந்தாலும் வீதி அகலமாக்கல் நிர்மாணத்திற்காக அவ்வீதியின் இருமருங்கிலும் கற்களும் கட்டுமானப் பொருட்களுமே நிறைந்திருக்கின்றன.

புனர்நிர்மாணம் செய்த வீதியின் பல பகுதிகளில் பாதுகாப்பற்ற சூழலும் காணப்படுகிறது. அந்த பகுதியில் பயணிக்கும் போது அச்சமே எழுகின்றது. அந்தளவிற்கு புனரமைத்த வீதியின் பகுதிகளே அச்சத்தை ஏற்படுத்துகின்றதே யானால்  இனிமேலும் புனரமைக்கப்படுகின்ற மற்றைய பகுதிகள்…? என்னவாகுமோ!

எது எப்படியோ துரிதகதியில் பணிகள் பணிகள் பூர்த்தியாக்கப்படுவதே நன்று. பொதுமக்களுக்கும் சரி. வீதிப் பணியில் ஈடுபடுவோருக்கும் சரி. உச்சிப்பொழுதில் வேகாத வெயிலில் நின்று காயத்தேவையில்லை...










தொடர்ந்து  பயணிப்பதற்காக காத்து நிற்கும் வாகனங்கள்



ஆபத்தான பாதையில் பயணிக்கும் வாகனங்கள்

No comments:

Post a Comment