யாரது யாரது சொல்லாமல் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது சமீபத்தில் எல்லோரின் முணுமுணுப்பையும் தாண்டி ரிங்ரோனாக மாறிப் போன பாடல். திரைப்படங்கள் வர்த்தகக ரீதியானவை. அதன் போக்கு அப்படித் தான் என்ற வரைமுறை இருக்கிறது. அதற்குள்ளே நாம் ஏன் போக வேண்டும். எல்லாருடைய கையிலும் தொலைபேசி பள்ளி மாணவர்களிடையே மீள முடியாத போதைப் பழக்கம் என்று பலரும் சொல்கிறார்கள்!
கடந்த ஒரு தசாப்தத்தில் கையடக்கத் தொலைபேசிப் பாவனை அதீதமாக புழக்கத்தில் இல்லையென்றாலும் பலரிடம் இருந்தது. கணணியால் இணையம் வந்து விட்டதால் இன்ற பலருடைய வீடுகளிலும் தொலைபேசி தொலைக்காட்சி வானொலி இவைகளுக்கும் மாற்றீடான கணணி நுழைந்து விட்டது. இணைய இணைப்பு பெற்று விட்டால் இம்மூன்று சாதனங்கள் பண்ணாத எத்தனையோ விடயங்களை அது கைக்குள்ளேயே கொண்டு வந்து விடுகிறது.
இணையம் சந்தையில் புழக்கத்திற்கு விடப்பட்ட போது தொலைபேசி தயாரிப்பாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது போன்ற சூழல் . ஆனால் கையடக்கத் தொலைபேசியில் இணையம் நுழைந்துவிட்டது. இப்போது பெருகி வரும் புதிய தொழில்நுட்பங்கள் கிடுகிடுவென்று என்னவெல்லாம் செய்து விடுகின்றது. நினைத்தவுடன் கணக்கில் அழைப்புக்களையும் குறுந்தகவல்களையும் பெறுவது போய் விம்பங்களாகவும் ஒலி ஒளி வடிவங்களிலும் தகவல்களை கண் முன்னே நிறுத்தி விடுகிறது. ஸ்கைப்பில் நேருக்குநேர் கதைப்பதும் சாதாணைமாகி விட்டது.
தொழில்நுட்பம் வளர்வது நன்மை தான். ஆனால் எந்தவொரு கருவையும் எடுத்துக் கொண்டால் நன்மை தீமை இருபக்க நாணயமாக தலை நீட்டுகின்றது வளர்ந்தோருக்கு எப்படி எப்படி பயனுற பயன்படுத்தலாம்என்ற பார்வை இருக்கிறது. அவர்களிலும் பெரும்பாலானோருக்கு இணையம் பற்றிய நல்ல அறிவு இருந்தாலும் அதை தவறாகவே பயன்படுத்துகின்றனர். வளர்ந்த அறிவானர்களே அறிவு கெட்டத்தனமாக நடக்கிறார்கள் என்றால் இளம் மாணவ சமுதாயம். அவர்களது எண்ணம் மனப்பாங்கு எந்தளவில் இருக்கிறது.
பள்ளியில் ஆசிரியர் பாட சம்பந்தமான விடயத்தை தவிர்த்து சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாலோ அவர்கள் எண்ணஅலைகள் போனைப் பற்றியே சுற்றிக் கொண்டிருக்கும். அவர்களின் சிந்தனையின் மையப்புள்ளியாக இந்த கையடக்கத் தொலைபேசி வழி இணையம் விளங்குகின்றது.
அவர்களின் அன்றாட வாழ்வியலில் பண்பாடு விழுமியங்கள் ஒழுக்கமுறைகள் கலை கலாச்சாரம் உணவுப் பழக்கவழக்கம் உறவுமுறை என அனைத்து அம்சங்களிலும் பாரிய கற்பாறையை போட்டு விட்டுச் செல்கின்றன.
கைக்குள்ளே உலகம் சுருங்கி விட்டதால் எவ்வளவோ வசதி தான். ஆனால் இந்தப் பேஸ்புக் ருவிட்டர் சிங்கோ H15 போன்ற சமூக வலைப் பின்னல்கள் அதிகளவில் தாக்கம் செலுத்துகின்றன. பேஸ்புக் மூலமாக வெளிநாடுகளிலும் ஒரு நாட்டில் அந்த நிலைமை இருக்கிறது மாணவர்களிடையே என்னவென்றால் தமக்குள்ளேயே கவிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இவ்இணைய கையடக்கத் தொலைபேசியின் ஆட்சிக்குள் நுழைந்து விட்டார்கள் எனக் கூற முடியாது. விரும்பியதால் தான் இவ்வளவும் ஆட்டிப் படைக்கிறது.
தமக்கு அறிமுகமானோர்கள் உறவினர்கள் நண்பர்களுடன் உரையாடுவது போதாதென்று முகம் தெரியாதவர்களுடன் தொடர்பு வைத்திருப்பதால் தவறான பாதையை நோக்கி செல்கின்றனர். இதனால் உறவினர்களுக்கிடையே புறக்கணிப்புக்கள் உடல் உளப் பாதிப்புக்கள் ஏற்பட காரணகர்த்தாவாகி விடுகின்றனர்.
பள்ளி மாணவர்களிடையே பணம் எப்படி வருகிறது. அவர்களுக்கு உழைப்பில்லை. வருமானமில்லை. எனவே வீட்டில் பொய் சொல்லி வாங்குகின்றனர். இப்படி குற்றங்களை செய்வதற்கும் கற்றுக் கொடுக்கிறது இந்த கைத்தொலைபேசிகள். சில மாணவர்கள் கைத்தொலைபேசி வியாபாரத்தையும் பகுதி நேரமாக செய்து வருகின்றனர்.
தற்போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான குரலை மாற்றிப் பேசும் வசதி பெரும்பாலான தடம்புரண்டு போகும் வாய்ப்புக்களை உருவாக்குகின்றது. இவற்றிற்கு தீர்வென்ன யார் தீர்ப்பார்கள் உணர்ந்து திருந்துவர் என்றெல்லாம் இலகுவாக சொல்லி விட முடியாது. ஆசிரியர் பெற்றோரே திருத்த வேண்டும். அதிலும் பெற்றோர் அதிகம் கவனிக்க வேண்டும். ஏனெனில் அவர்களே தமது பிள்ளைகளின் சீiழிவுக்கு காரணமாகி விடுகின்றனர்.
நம் நாட்டில் அநேகமான பள்ளியில் தொலைபேசிப் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் பல்வேறு சாதக பாதகங்களை இணையக் கைத்தொலைபேசி தோற்றுவித்தாலும் கூட இளம் சமுதாயத்தினருக்கு நஞ்சாகவே இருந்து பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment