Thursday, August 2, 2012

நன்றியுடன் நாம்…


இந்திய மண் மிதித்துமே ஆரம்பித்த
வரவேற்பு
மாபெரும் அறிவுப்படலத்துடன் அன்புப்படலமாக
தெவிட்ட வைத்திருக்கின்றது
இன்று!

சென்னைப் பல்கலைக்கழக முத்துக்கள்
எமக்கு கிடைத்த பொன்முத்துக்கள்


கண்ட நாள் முதல்
காதல் கொள்வது ஒரு வகை
கண்ட நாள் முதல்
உதவி செய்வது இன்னொரு வகை

இவர்கள் எமக்கு உதவி புரிந்தததை சொல்வதற்கு
உதவி என்ற மூன்றெழுத்து போதுமா…!
பசித்தவுடன் அம்மா போல பரிமாறியிருக்கிறார்கள்
வயிற்றுக்குள் எரிமலை குழம்பாகாமல் பார்த்துக் கொண்டார்கள்
இந்த அன்பை சொல்வதற்கு மூன்றெழுத்து போதுமா
போதாது!

சுற்றுலாக் கொண்டாட்டம்
கல்விச்சுற்றுலா என்றபோதும்
நண்பர்களுடன் செல்வது புது ஆனந்தம்!

இந்தியக்கலைகள் வியக்க வைக்கும் பிரம்மாண்டங்கள்!

வழிகாட்டியாக கைத்தொலைபேசி
காதுகளில் இதழியல் துறைத்தலைவர் குரல்
வரலாற்றை கண்முன் விரிக்க
நடைபோடத் தொடங்கியது கால்கள்
பட்டாம்பூச்சிச் சிறகாய் எம் நெஞ்சங்கள்!

தோள் கொடுக்கும் நட்பு
தோளைத் தட்டி நண்பேன்டா சொல்ல வைத்தது
மூத்த நட்புக்கள்
நெஞ்சார்ந்த உறவுகளாகிப் போன நட்புக்கள் அவை!

முற்றத்தின் நருவே
பாரம்பரியம் துளிர்த்தது
கலைகளை இப்படியும் வாழ வைக்கலாம் என்ற
நம்பிக்கை ஒளியில்
ஊடக மாணவர் முற்றம்!

நீங்கள் இல்லையெனில்
எமக்கான அறிவுப்பயணம்
மீகாமன் இல்லாத கப்பலாக இருந்திருக்கும்
தத்தளித்து திசைமாறியிருப்போமா -இல்லை
போராடி கரையேறியிருப்போமா தெரியவில்லை

இறைவன் நட்புத் தோட்டத்தை எங்கும் உருவாக்குவதில்லை
ஆனால் எம்மிடம்
அந்த வஞ்சனையை அவன் வைத்துக் கொள்ளவில்லை

புத்தாக்கப் பயிற்சி
புதிய வார்ப்புக்களை உருவாக்கும் யுக்தி
அன்பைக் குழைத்து
அறிவைப் பெருக்கி
நட்பை உருவாக்கி
அனுபவத்தை ஊட்டிய
படைப்பு!

-கௌசி

No comments:

Post a Comment