Wednesday, February 1, 2012

பார்வை வழியே விழுந்த கலை

ஒரு செய்தியை புகைப்படத்தின் ஊடாக இலகுவாக தெரிவித்து விடலாம். ஆயிரம் எழுத்துக்கள் சொல்ல முடியாத செய்தியினை ஒரு புகைப்படம் சொல்லிவிடும். அந்த சக்தி புகைப்படத்திற்கு இருக்கின்றது.

தற்போது ஊடகவியலிலும் புகைப்பட ஊடகவியலாக இக்கலை நுழைந்து இருக்கின்றது. செய்தியை புகைப் படத்தின் மூலமாக தெரிவிப்பது புகைப் பட ஊடகவியலாக கொள்ளப்படுகின்றது.

புகைப்படப் பத்திரி கையியலில் புகைப்படங்கள் முதன்மை இடத்தைப் பெறுகின்றன. புகைப்படப் பத்திரிகையியலானது செய்தியைப் போன்று நேரத்துடன் போட்டியிடுவது குறிப்பிடத் தக்க விடயமாகும்.  “புகைப்படக்கலை உண்மையானது” என அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான பெறனிஸ் அபொட் கூறியுள்ளார். இவர் 1898ஆம் ஆண்டிலிருந்து 1991வரையான காலப் பகுதியில் புகைப்படக் கரைஞராக மிளிர்ந்தவர்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெளிநாடுகளில் வளர்ச்சி பெற்று வந்த புகைப்பட ஊடகவியல் நம் நாட்டிலும் கடந்த ஒரு தசாப்தமாக பரவி வளர்ச்சி அடைந்து வருகின்றது.

ஓன்றிற்கு மேற்பட்ட புகைப்படங்களின் மூலம் செய்தியை தெரிவிப்பது புகைப்படக் கட்டுரை எனப்படுகின்றது. புகைப்படக் கட்டுரைகளின் மூலம் வாசகர்கள் புகைப்படங்களுடன் உரையாடுகின்றார்கள். புகைப்படக் கட்டுரை களில் உள்ளடக்;கப்படும் புகைப்படங்களுக்கான குறிப்புக்கள், குறிப்பிட்ட புகைப்படக் கட்டுரை சம்பந்தமான சிறு குறிப்புடன் இடம் பெறுவது அவசியமாகும்.

புகைப்படக் கட்டுரைக்கான புகைப்படங்களை தெரிவு செய்யும் போது வௌ;வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு வகையான புகைப்படங்களை உள்ளடக்க வேண்டும்.

புகைப்படக் கோணங்களில் ‘பறவையின் பார்வை, தங்கமான பகுதி, ஒடுக்கமான கோடுகள், நெருங்கிய அமைப்பு, மிகவும் நெருங்கிய, மையம், செங்குத்து, கிடையான மற்றும் செங்குத்து, சரிவான’ எனப் பல கோணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோணத்திலும் ஏதோ ஒரு கதை சொல்வதாக புகைப்படம் இருக்க வேண்டும்.

புகைப்படம் என்பது ஒரு கலவையாகும். சந்ததிக்கு விட்டுச் செல்லும் ஓர் ஆவணமாக புகைப் படத்தை வைத்திருக்கின்றார்கள். வார்த்தைகளில் சொல்ல முடியாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும். சமூகப் பிரச்சினைகளைச் சொல் வதற்கு சிறந்த ஊடகம் புகைப்படமே! அதேசமயம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

கடந்த மாதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் புகைப்படக் கருத்தரங்கு புகைப்படக் கலைஞர் துஷ்யந்தி கனகசபாபதிப்பிள்ளையால் நடத்தப்பட்டது. ஒரு வாரம் நிகழ்த்தப்பட்ட கருத்தரங்கு ஊடக மாணவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நடாத்தப்பட்டது. பயிற்சி முடிவில் புகைப்படக் கண்காட்சி ஒன்றினையும் நடாத்தினார்கள்.

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் இரு புகைப்படக் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. ஊடக மையத்தினரின் ‘எங்கள் கதைகள்’ மற்றும் பல்கலைக்கழக ஊடகத் துறையினரின் ‘சாரல்’ புகைப்படத் துறையின் வளர்ச்சி நிலையையே காட்டுகின்றது. அலையன்ஸ் பிரான்ஸிஸ் டீ ஜப்னா நிறுவனத்தால்  ‘நீர்- குடங்கள்- பெண்’ என்ற கருப்பொருளிலான புகைப்படப் போட்டியொன்றும் நடத்தப்பட்;டு  பல் கலைக்கழகத்தில் கண்காட்சியும் நடாத்தப்பட்டது.

அண்மையில் cART wheel initiative நிறுவனத்தினால் வடபகுதி சிறுவர்கள் அறுபது பேரின் ஓவியங்கள் காட்சிப் படுத்தப்பட்டது. பத்துநாள் பயிற்சி  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள மகிழ்ச்சி நிலையங்களி;ல் நடைபெற்றது. பயிற்சி முடிவில் கண்காட்சியொன்று காட்சிப்படுத்தப்பட்டது.
எம் மாவட்டத்தில் இருந்தும் புகைப்படம் சார்ந்த கண்காட்சிகள் நடாத்தப்படுவது வரவேற்கத்தக்க மாற்றமாகும்.

கடிவாளம் 11

No comments:

Post a Comment