Wednesday, February 1, 2012

எம் வாழ்வு தான் என்ன?

எம் வாழ்வு தான் என்ன?
எம் புருவ மத்தியில் 
சிந்தனை முடிச்சுக்கள்...


தொட்டிலில் ஆடும் குழந்தையும்
கைத்தொலைபேசியில் 
பாட்டுக் கோட்டுக் கொண்டு தான்
உறங்குவேன் என காலை உதைக்கின்றது!
பள்ளி செல்லும் வாண்டு கூட 
இரவில் தன் வகுப்புத் தோழிக்கு எஸ்.எம்.எஸ்
அனுப்பாமல் சாப்பிட மறுக்கின்றது!
சீரான பயணத்திற்காய் 
காப்பெற் போட்டு விட்டால்
துள்ளல் இளசுகள் 
வேகத்தைக் கூட்டி ஆயுளைக் குறைக்கின்றன!
மூச்சு முட்டக் குடிக்கிறது என்றால்
எப்படி என்று எங்கள் இளசுகளிடம் 
பாடம் கற்று விடலாம்
இந்தக் காலம் அப்பிடிக் கிடக்கின்றது!

அம்மா  கேட்டால் காசிருக்காது
கைத்தொலைபேசிக்கும்
பெற்றோலுக்கும் காசு நிரப்ப மறப்பதில்லை!
கண்ட கண்ட நோயுக்கெல்லாம் 
வைத்தியசாலைப் பக்கம் போகாத 
எங்கள் சனம்
இப்போது எல்லா நோயுக்கும் போகின்றார்கள்!
மீள்குடியேற்றங்கள் அரைக்குடியேற்றங்களாக 
வெள்ளக்காடுகளின் மேல் பூத்து நிற்கின்றன!
கலாச்சாரம் பிறளாத மண்ணில்
எயிட்ஸ்சும் வந்து குடிகொள்கின்றது!
நவீனம் என்ற பெயரில்
ஆள்பாதி ஆடைபாதியாக திரியும் 
எம் மங்கைகளைப் பார்த்தால்
காளையருக்கு மீசை துடிக்காதா...
துடிக்கவில்லையே!
துச்சமாய் பார்த்ததுமல்லாது
துச்சாதனனாக மாறி துகில் உரிக்கின்றனர்.
யுத்தம் தந்த வடுக்கள் 
நெஞ்சின் ஓரமாக மாறாத ரணமாக இருக்க
விதவைகளும் கன்னிகளும்
திரும்பத் திரும்ப சித்ரவதைப்படுகின்றனர்
மீண்டெழும் அபிவிருத்தி இதற்கு மட்டும் இல்லையோ...?

1 comment:

  1. எம் வாழ்வு தான் என்ன?

    ReplyDelete