Wednesday, February 1, 2012

மீள்குடியேறியும் தொழிலின்றித் தவிக்கும் நாகர்கோவில் மக்கள்

யுத்தம் தந்த வேதனை நெஞ்சின் ஓரமாக இருக்க சொந்த இடம் செல்வதே இடம்பெயர்ந்த மக்களது முக்கிய நோக்காக இருக்கின்றது. கண்ணிவெடிகள் அகற்றி வசிப்பதற்காக எப்போது தமது இடத்திற்கு விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது.
ஒவ்வொரு இடமாக மக்கள் மீள்குடியேற்றம் நடைபெறுகின்றது. இந்த வருடம் நடுப்பகுதியில் நாகர்கோவில் பிரதேச மக்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்பி உள்ளனர். எனினும் இன்னமும் தம்முடைய வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்.


இப்பிரதேச மக்களுக்கென 26தற்காலிக வீடுகள் சோஆ நிறுவனத்தினாலும் ஆறு கிணறுகள் சேவா லங்கா நிறுவனத்தாலும் அமைத்துக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.




ஏற்கனவே பாவனையில் இருந்து பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இருபத்து நான்கு  கிணறுகள் துப்பரவு செய்யப்பட்டு இருக்கின்றன. எனினும் தண்ணீர் அக்கிணறுகளில் ஊற்றெடுக்கவில்லை. குடிநீருக்காக அருகில் உள்ளவர்களது கிணறுகள் மற்றும் சிறிது தூரம் சென்று எடுத்தே பாவிக்கின்றனர்.










இது பற்றி அங்கு வசிக்கும் முருகேசு செல்வரத்தினம் என்பவர் கூறுகையில் (வயது 52)இ “இங்க நாங்கள் மீளக்     குடியேறும் போது   தகரம் தந்தவை. ஆனால் மேல கிடுகால தான் பின்னிப் போட்டனாங்கள்.

இப்ப மழை வந்து கீழே மண்ணெல்லாம் ஊறுது. என்ன செய்யிறது? இங்க தான் படுக்க வேண்டிக் கிடக்குது. குடிதண்ணிக்காக 1ஃ4 மைல் ½ மைல் என்டு போய்த்தான் எடுக்கிறம். நாங்கள் இருக்க வந்த புதுசுல தண்ணி கொண்டந்து அடிச்சிச்சினம். பிறகு கிணறுகள் திருத்தித் தந்ததால கொண்டு வாறேல்லை.

இங்க இருக்கிற கிணறுகளில தண்ணியும்  சரியில்லை. தொழிலும் சரியாயில்லை. இங்கால கடற்தொழில்  செய்யிறதுக்கு அனுமதி இருக்கு.
எங்களிட்ட அதுக்கான சாமான்கள் தான் இல்லை. சாமான்கள் தாறென்டு சொல்லினம் தான். அது எப்ப கிடைக்குதோ ஆருக்குத் தெரியும். வேற ஆக்களிட்ட தான் தொழிலுக்குப் போறம். நூறோ இருநூறோ கிடைக்குது. சாப்பாட்டுச் செலவுக்கு காணாது” என்று சலிப்புடன் சொல்கின்றார்.
J/424 நாகர்கோவில் வடக்கு பிரதேச கிராமசேவையாளர் பாலசுந்தரம் “இங்குள்ள மக்களின் கடற்தொழிலுக் காக மீன்பிடிக் உபகரணங்கள்; வழங்கப்படுவதற்கான முயற்சி களை சோஆ நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.


இம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்நிறுவனம் அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்து பதிவுகளை மேற்கொண்டது. விரைவில் மீனவர்கள் கடற் தொழிலை செய்வதற்கு கருவிகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது.


இங்கு குடிநீர்ப் பிரச்சினை பெரியவில் காண்படுகின்றது. ஆரம்பத்தில் பிரதேச சபையினால் குடிநீர் தினமும் குடிநீர்த் தாங்கியில் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால் கிணறுகள் புனரமைப்பு மற்றும் புதிதாக கட்டப்பட்டு வழங்கியவுடன் நீர் வழங்குவது நிறுத்தப்பட்டு இருக்கின்றது” என்றார்.

சில மக்கள் இன்னமும் பற்றைகளை தமது மலசலகூடமாக பாவித்து வருகின்றனர். இதனால் அங்குள்ள சிறுவர்கள் அடிக்கடி சுகாதார சீர்கேடுகளில் பாதிப்படைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடிவாளம் 11

No comments:

Post a Comment