Wednesday, December 7, 2011

சொந்த வாழ்வு நோக்கிப் பயணிக்கும் தெல்லிப்பளை வாசிகள்- வீதிப் புனரமைப்பு


யூனியன் கல்லூரிக்கு முன்னர் உள்ள வீதி புனரமைக்கப்படுகின்றது.

சொந்த வாழ்க்கைக்கு தயாராகும் தெல்லிப்பளை வாழ் மக்கள்

தெல்லிப்பளை செல்வாபுரம்
யுத்தத்தின் கோரத்தால்
சொந்த மக்களின்றி வாடிய பயிர்!

இருபத்தொரு வருடங்கள் வேற்றுநிலப் புகலிடம்
சொந்த இடத்தின் காதலை புறந்தள்ளி
சொந்த உறவுகளைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம்
யுத்தத்தால்...

யுத்தம் தந்த வடுக்கள்
அப்படியே நெஞ்சுக்குள் ஓரமாக இருக்க
இன்று சொந்தவீடு சேர்ந்த மகிழ்ச்சியில்
புதிதாக மனைகளை
எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.