Wednesday, February 23, 2011

யாழில் சகோதர மொழியில் பெயர்ப்பலகைகளின் ஆதிக்கம்... புரியாது திணறும் மக்கள்

யாழ்ப்பாணத்தில் போர் முடிந்த காலப்பகுதியிலிருந்து பெருமளவான வணிக நிறுவனங்களும் தனியார் வங்கிகளும் படையெடுத்துள்ளன. பல வியாபார நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தை தமது வர்த்தகத்திற்கான மிகப் பெரிய களத்தை ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கையுடன் மையமிட்டுள்ளன.

புதுப்புது வியாபாரப் பொருட்கள், சேவைகள் வருவது வரவேற்கத் தகுந்ததென்றாலும் கூட மொழியென்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது.

சகோதர மொழியான சிங்களத்திலேயே அவற்றின் விளம்பரப் பதாகைகளும் விண்ணப்படிவங்களும் வழங்கப்படுகின்றன. சிங்கள மொழியில் காணப்படுகின்ற படிவங்களோ பதாகைகளோ அப்படியே தமிழிலே மாற்றி எழுதினால் பாவனைக்கு சீராக இருக்கும். அப்படியே தமிழுக்கு மாற்றினாலும் அதிலே காணப்படுகின்ற தவறுகள் தமிழ் கொலை என்றே எண்ணத் தோன்றுகின்றது.

பல தனியார் நிறுவனங்கள் தமது விளம்பரத்தை மேம்படுவதற்காக வீதிகளிற்கு தம் செலவில் பெயர்ப்பலகைகளை நிறுவுகின்றன. அதிலே தமிழை குதறிடித்து எழுதியிருக்கும் நிலைமைகள் வருத்தத்தை ஏற்படுத்துகின்ற விடயமாகும். இவர்களையாவது விட்டு விடலாம். ஏதோ மொழி பற்றிய புரிதல் இல்லாமல் நடந்து கொள்கிறார்களென்று! ஆனால் வட மாகாணத்தில் நிறுவப்படும் பெயர்ப் பலகைகளிலே நிர்வாக அலுவலகங்களிலே தமிழ் கொலைகள் இடம்பெற்றிருப்பதனை அவதானிக்க முடிகிறது.

No comments:

Post a Comment